குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்க போக்குவரத்து அமைச்சர் மறுப்பு

Published By: Vishnu

02 Dec, 2021 | 06:32 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனவரி மாதம் முதல் 14 ரூபா குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 20 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பவித்ரா வன்னியராட்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.

May be an image of one or more people, people sitting and indoor

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் மக்கள் பொருளாதார பாதிப்புக்களை எதிர்க்கொண்டுள்ள நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்க்கொண்டுள்ள சிக்கல் குறித்து மாற்று வழி முறைகளில் தீரவு வழங்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பஸ் கட்டணங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதற்கமைய தற்போது 14 ரூபாவாக காணப்படும் குறைந்தப்பட்ச பஸ் கட்டணத்தை 20 ரூபாவாக அதிகரிக்கவும், ஏனைய கட்டணங்களை 15 ரூபா வரை திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றம், பஸ்களின் உதிரிபாகங்களினது விலையேற்றம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு  கட்டணத்தை திருத்தம் செய்யும் தீர்மானத்தை முன்னெடுத்துள்ளதாகவும்,அ தற்கான அறிவுறுத்தலை இலங்கை போக்குவரத்து சபையிடம் இவ்வாரம் அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந் நிலையிலேயே பஸ் கட்டணம் திருத்தம் தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் முன்வைத்த யோசனைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47