இலங்கையில் இதுவரை ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை - சந்திம ஜீவந்தர

Published By: Digital Desk 4

02 Dec, 2021 | 09:54 PM
image

(ஆர்.யசி)

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருகை தந்துள்ளவர்களின் உடல் நிலை மாதிரிகள் பெறப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்படவில்லை.

அதற்கமைய இலங்கையில் இதுவரை ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என்பது கூற முடியும் என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

புதிய டெல்டா பிறழ்வுக்கு தடுப்பூசிகள் தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகமுள்ளது  என்கிறார் வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர | Virakesari.lk

ஜனாதிபதி ஊடக மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார். 

அவர் மேலும் கூறுகையில்,

வைரஸ் பரவலில் இருந்து விடுபட இருக்கும் இரண்டு வழிகளில் ஒன்று, வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும், அதேபோல் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு வழிமுறைகளை தாண்டி எம்மால் மாற்று வழிகளை முன்னெடுக்க முடியாது. தடுப்பூசி ஏற்றிக்கொண்டாலும் ஒமிக்ரோன் வைரஸ் பரவும் என்கிறனர், அல்லது தடுப்பூசிக்கு ஒமிக்ரோன் கட்டுப்படாது என்கின்றனர். 

இது கேள்வியாக இருந்தாலும், எமக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் கூட தடுப்பூசியானது வைரஸின் தாக்கத்தை குறைக்கும், அதேபோல் பூஸ்டர் தடுப்பூசி மேலும் எமக்கு சாதகமாக அமையும்.

உலகில் தடுப்பூசி ஏற்றிகொண்ட நாடுகளே வைரஸ் தொற்றுகளை சரியாக சமாளித்து வருகின்றது. இலங்கையும் ஏனைய நாடுகளை விடவும் முன்னிலையில் உள்ள காரணத்தினால் இது வெற்றியளிக்கும்.

எவரும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவில்லை என்றால் உடனடியாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள், பெற்றுக்கொண்டவர்கள் ஆலோசனைகளுக்கு அமைய பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுங்கள்.

அதேபோல் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களின் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. அவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனரா,அவர்கள் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனரா என்பது குறித்த ஆய்வு அறிக்கை நாளை எமக்கு கிடைக்கும், எதிர்வரும் நாட்களில் அறிக்கையை சுகாதார அமைச்சிற்கு வழங்க முடியும்.சுகாதார தரப்பு எமக்கு கொடுத்த மாதிரிகளுக்கு அமைய அதன் பரிசோதனைகளில் இலங்கையில் இதுவரை ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என்பது தெரிவிக்க முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41