கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாட்டை முடக்குவது தீர்வல்ல - சுகாதார அமைச்சின் செயலாளர் 

Published By: Digital Desk 4

02 Dec, 2021 | 09:37 PM
image

 (ஆர்.யசி)

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்கினால் மக்களினதும், நாட்டினதும் வருமான வழிகளே இல்லாமல் போகும் எனவும்,  நாட்டை முடக்காது சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கையெடுப்பதே சிறந்ததாக இருக்குமெனவும்  சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எச்.முனசிங்க தெரிவித்துள்ளார்.

அதிகளவானோருக்கு சிகிச்சையளிக்கக் கூடிய கொரோனா-19 நிலையம்: சுகாதார அமைச்சு  தீர்மானம் | Virakesari.lk

ஜனாதிபதி ஊடக மையத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார். 

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டை முடக்கினால் வைரஸை கட்டுப்படுத்த முடியுமென்று கூறினர். இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் நாட்டை மூடினோம்.இதனால்  தொற்றாளர் எண்ணிக்கை பூச்சியம் வரையில் குறைந்தாலும் திறந்த பின்னர் மீண்டும் அதிகரித்தது.

இதன்போது மீண்டும் மூடும் நிலை உருவானது. இவ்வாறு நாட்டை மூடும் போது மக்களின் வாழ்வாதரமே பாதிக்கப்படும். நாட்டை மூடியிருந்த போது மக்கள் தமது பிரச்சனைகளை கூறியுள்ளனர்.

அத்துடன் சுற்றுலாத்துறையை எடுத்துக்கொண்டால் அவர்களின் மூலம் மட்டுமே தொற்று ஏற்படவில்லை. இதனை விடவும் நாட்டுக்குள் வைரஸ் வருவதற்கான வழிகள் உள்ளன.

இதனால் சுற்றுலாத்துறையினர் வருவதை தடுப்பதன் மூலம் நாட்டில் வைரஸை கட்டுப்படுத்த முடியுமென்ற நிலைப்பாட்டில் சுகாதார அமைச்சு இல்லை. சுற்றுலாப் பயணிகள் முறையாக சுகாதார ஒழுங்குவிதிகளுடன் இருந்தால் அவ்வாறான பிரச்சனை ஏற்படாது.

அதேபோன்று நோயை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை மூடி வருமான வழிகளை மூடுகின்றோம். மக்களுக்கு உணவுக்கு பணம், மருந்து கொள்வனவுக்கான பணம் இல்லாமல் போகும்.

அதன்படி அங்கு வரும் வருமானம் இங்கு இல்லாமல் போவதை பார்க்கும் போது இதனை நியாயப்படுத்த முடியுமாக இருக்கும். இதன்படி நாட்டை மூடாது ஒழுங்குவிதிகளை பின்பற்றி செய்தால் அனைத்தையும் முன்னெடுக்க முடியும் என்றார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22