ஒமிக்ரோன் பிறழ்வை நாட்டில் கண்டறிய விசேட திட்டம் : வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

Published By: Digital Desk 3

02 Dec, 2021 | 03:34 PM
image

(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைவரதும் அல்லது நாட்டில் தொற்று அறிகுறிகள் தென்படும் சகலரதும் மாதிரிகளைப் பெற்று  ஒமிக்ரோன்  பிறழ்வினைக் கண்டறிவது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும். 

எனவே வழமைக்கு மாறாக அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் பகுதிகளை மாத்திரம் இலக்காகக் கொண்டு பரிசோதனைகளை விஸ்தரிக்க தீர்மானித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எந்தவொரு நாட்டிலிருந்து வருகை தந்தாலும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுத்து தொற்று ஏற்படவில்லை என்ற முடிவு கிடைக்கப் பெற்றிருந்தால் அதனை உறுதிப்படுத்தும் ஆவணத்துடனேயே நாட்டுக்குள் நுழைய முடியும். விமானத்தில் ஏறுவதற்கு 72 மணித்தியாலயத்திற்கு முன்னர் இந்த பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அவ்வாறன்றி கட்டுப்பாடுகளின்றி நாட்டுக்கு வருகை தர வேண்டுமெனில் சகலரும் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று காணப்பட்டாலும் அவர்களிடமிருந்து ஏனையோருக்கு பரவக் கூடிய வாய்ப்புக்கள் குறைவாகும்.

முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளமை மற்றும் 72 மணித்தியாலயத்திற்கு முன்னர் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை என்ற இரண்டுக்கான ஆவணங்களைக் கொண்டவர்கள் மாத்திரமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர். ஏனையவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்.

விமானங்களில் வருகை தரும் அனைவரது மாதிரிகளையும் பெற்று திரிபுகள் தொடர்பான ஆய்விற்கு உட்படுத்தினால் மாத்திரமே வைரசுடன் நாட்டுக்குள் வருபவர்களை இனங்காண முடியும். 

எனினும் இது செலவு கூடிய , அதிக காலம் செல்லக் கூடியதும் சிரமமான நடைமுறையுமாகும்.

எனவே தான் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத மற்றும் அபாயம் மிக்க தரப்பினராக இனங்காணப்பட்டுள்ளவர்களின் மாதிரியைப் பெற்று ஆய்விற்கு உட்படுத்துகின்றோம். 

இது தவிர கொவிட் தொற்றுடன் தொற்றாளர்கள் நாட்டுக்கு வருகை தராமலிருப்பதற்கான ஏனைய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51