நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான இணைந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது - டக்ளஸ்

Published By: Gayathri

02 Dec, 2021 | 10:57 AM
image

நாவலர் கலாசார மண்டபம் தொடர்பாக எதிர்காலத்தில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினதும் யாழ். மாநகர சபையினதும் இணைந்த செயற்பாட்டுக்கான முன்மொழிவு வரவேற்கத்தக்கது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக, குறிப்பாக இந்து ஆலயங்களின் அபிவிருத்தி மற்றும் பரிபாலனச் செயற்பாடுகளைச் செழுமைப்படுத்துவதற்கான வழிமுறைகள், நாவலர் கலாசார மண்டபத்தின் புனரைமைப்பு மற்றும்  இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் யாழ். மாநகர சபை இணைந்து கூட்டு முயற்சியில் நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான பணிகளை முன்னெடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி இராமச் சந்திரக் குருக்கள் பாபு சர்மா, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் சந்திப்பு ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். 

இதேவேளை நாவலர் கலாசார மண்டபம் தொடர்பாகப் பிரஸ்தாபிக்கப்பட்ட வேளை மேற்படி விடயத்தினைத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் தேவானந்தா கூறுகையில், 

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு முழு உரிமையுடைய நாவலர் கலாசார மண்டபத்தைத் தற்போது யாழ்.மாநகர சபை நிர்வாகமே பராமரித்து வருகின்றது. 

சில முரண்பாடுகள் நிலவியபோதும்  அதனை இரு நிர்வாகமும் இணைந்து பராமரிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட  தீர்மானத்தைப் பெரிதும்  வரவேற்கிறேன் என்றார்.

எதிர்வரும் ஆண்டு நாவலரின் இருநூறாவது பிறந்த ஆண்டு இந்த ஆண்டிலே புதுப்பொலிவோடு கூடியதாகச் செயற்பாடுகள் அமையவேண்டும் என்றும் அதற்குக் கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பினைச் சிறந்த முறையிலே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், சைவ  சமய மறுமலர்ச்சியின் தந்தையான நாவலர் பெருமானுக்கு  இப்படி ஒரு விழா எடுப்பதற்கும் வரப்போகின்ற ஆண்டினை நாவலர் ஆண்டாகப் பிரகடனம் செய்வதற்கும் தயாராகவுள்ள நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். 

மேலும் இந்தக் கட்டத்தில் நிலையறிந்து கூட்டாக இணைந்து செயற்படுவதற்கான தீர்மானத்திற்கு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கும் யாழ். மாநகர சபைக்கும் எனது பாராட்டுகள் என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55