எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்தாக வேண்டும் - உதய கம்மன்பில

Published By: Digital Desk 3

02 Dec, 2021 | 09:03 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கடந்த கலாத்தில் எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்யாத காரணத்தினால் இறுதி பத்து மாதங்களில் மாத்திரம் 7000 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 

எனவே எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, வாய்மூல விடைகளுக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 52 ஆண்டுகள் பழைமையானது. இதனை யாருக்கும் விற்க நாம் தீர்மானிக்கவும் இல்லை, அவ்வாறு விற்பதற்காக கேள்வி எழுமென நினைக்கவும் இல்லை. 

உலகின் தற்போதைய தொழிநுட்பத்துடன் ஒப்பிடும் வேளையில் இது 52 ஆண்டுகள் பழைமையான தொழிநுட்ப முறைமையுடன் இயங்குகின்ற காரணத்தினால் இதனை கொண்டு நடத்துவதே கடினமாக உள்ளது. 

ஆகவே சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை விற்க எந்த நோக்கமும் எமக்கு இல்லை. எவ்வாறு இருப்பினும் 50 நாட்களுக்கு இந்த நிலையத்தை மூடவே தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் மீண்டும் இயக்கத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றோம்.

அதேபோல் எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம், கடந்த கலாத்தில் இதில் மாற்றங்களை செய்யாத காரணத்தினால் இறுதி பத்து மாதங்களில் மாத்திரம் 7000 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 

எனவே ஒன்றில் விலை மாற்றம் ஏற்பட வேண்டும். இல்லையேல் திறைசேரியின் மூலமாக நிவாரணம் வழங்க வேண்டும் என நிதி அமைச்சரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளோம். 

கடந்த ஆறு மாதங்களில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யாத உலகில் ஒரே நாடு இலங்கை என்பதையும் சபைக்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34