பஷில் - மோடி சந்திப்பு இன்று : பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் சீதாராமனுடன் முக்கிய பேச்சு

02 Dec, 2021 | 08:06 AM
image

(ஆர்.ராம்)

இந்தியாவின் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

இதன்போது,  இலங்கை - இந்திய இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார பரஸ்பர விடயங்கள் பற்றிக் கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை,நேற்று புதன்கிழமை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்வுக்கும் இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது புதுடில்லிக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலந்த மொரகொட, மற்றும் உயர்ஸ்தானிகரகத்தின் அதிகரிகள், இந்திய நிதி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்புக்களை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் விரிவான பேச்சுக்களை நடத்துள்ளார்.

அத்துடன், இதுகால வரையிலும் இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையில் காணப்பட்ட பொருளாதார உறவுகளை நினைவுகூர்ந்தவர்,  இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக இந்தியா வழங்கிய பூரணமான ஒத்துழைப்புக்கள் மற்றும் ஆதரவுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய நிலையில் இலங்கை, மற்றும் இந்தியாவுக்கு இடையில் காணப்படுகின்ற பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை மேம்பட்ட வகையில் முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறைகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது இரு நாட்டு நிதி அமைச்சர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை, அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்தியாவிலுள்ள சுலப் சர்வதேச சமூக சேவை நிறுவனத்திற்கும் விஜயம் செய்தார்.

அங்கு விஜயம் செய்தவர், அமைப்பின் நிறுவனர் டாக்டர் பிந்தேஷ்வர் பதக் சுலப் கிராமை சந்தித்தார்.

அத்துடன் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உயிர்வாயுவைப் பயன்படுத்தி சமைக்கும் செயன்முறையையும் தன் கைப்பட பரிசோதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 15:48:25
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01