மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் போட்டியின் பிடியை நழுவ விடுமா இலங்கை ? 

02 Dec, 2021 | 07:48 AM
image

(என்.வீ.ஏ.)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2 ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி அதன் முதல் 2 விக்கெட்களை அநாவசியமாக தாரைவார்த்தன் காரணமாக ஆட்டத்தின் பிடியை நழுவவிட்டுவிடுமோ என எண்ண வைத்துள்ளது.

Kyle Mayers plays the ball past the leg-slip fielder, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 3rd day, December 1, 2021

முதலாவது இன்னிங்ஸில் பலமான நிலையிலிருந்த மேற்கிந்தியத் தீவுகளின் 6 விக்கெட்களை தனி ஒருவராக ரமேஷ் மெண்டிஸ் கைப்பற்றியபோதிலும் அதனை இலங்கை அணி சாதகமாக்கிக்கொள்ளத் தவறியமை இரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sri Lanka's close-in fielders go up in appeal against Nkrumah Bonner, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 3rd day, December 1, 2021

2 ஆவது இன்னிங்ஸில் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன (6), ஓஷத பெர்னாண்டோ (14) ஆகிய இருவரும் 'அவசரத் துடுக்கை' காரணமாக இல்லாத ஓட்டத்துக்கு ஆசைப்பட்டு அநாவசியமாக தங்களது விக்கெட்ளைத் தாரைவார்த்தமை இலங்கை அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

Kraigg Brathwaite and Nkrumah Bonner run across for a single, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 3rd day, December 1, 2021

போட்டியின் 3ஆம் நாளான புதன்கிழமை (01) ஆட்டநேர முடிவில் இலங்கை அதன் 2 ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன் பிரகாரம் 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதமிருக்க 3 ஓட்டங்களால் இலங்கை தொடர்ந்தும் பின்னிலையில் இருக்கின்றது.

பெத்தும் நிஸ்ஸன்க 21 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

Nkrumah Bonner flicks past the short-leg fielder, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 3rd day, December 1, 2021

இவர்கள் இருவரும் நாளைய தினம் காலை மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி கணிசமான ஓட்டங்களைப் பெறத் தவறினால் போட்டி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சாதகமாக திரும்புவதை தவிர்க்க முடியாமல் போகும்.

Nkrumah Bonner goes deep in his crease to play a pull, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 3rd day, December 1, 2021

போட்டியின் 3ஆம் நாளான இன்று புதன்கிழமை காலை தனது 1ஆவது இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் சகல விக்கெட்களையும் இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றது.

ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையிலிருந்த மேற்கிந்தியத் தீவுகள், அதன் பின்னர் இலங்கையைப் போன்றே சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்தது. 

Praveen Jayawickrama celebrates with his team-mates, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 2nd day, November 30, 2021

முதல் இன்னிங்ஸில் இலங்கை அதன் கடைசி 9 விக்கெட்களை 65 ஓட்டங்களுக்கு இழந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அதன் கடைசி 9 விக்கெட்களை 114 ஓட்டங்களுக்கு இழந்தது.

துடுப்பாட்டத்தில் க்ரெய்க் ப்ரத்வெய்ட் (72), ஜெர்மெய்ன் ப்ளக்வூட் (44), கய்ல் மேயர்ஸ் (36 ஆ.இ.), நிக்ருமா பொன்னர் (35) ஆகியோர் அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

Jomel Warrican claimed 4 for 50, Sri Lanka vs West Indies, 2nd Test, Galle, 2nd day, November 30, 2021

இலங்கை பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 70 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

தனது 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரமேஷ் மெண்டிஸ் முதல் தடவையாக ஓர் இன்னிங்ஸில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார். அத்துடன் ஓர் இன்னிங்ஸில் அவரது தனிப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகவும் இது அமைந்தது.

இலங்கை அதன் முதலாவது இன்னிங்ஸில் 204 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31