இலங்கையில் கொவிட் மரணங்கள் அதிகமாகவே உள்ளன : முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன

Published By: Gayathri

01 Dec, 2021 | 12:37 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகின்றது. 

அத்துன் சிகரடுக்கான விலை அதிகரிப்பால் நிறுவனங்களே அதிக இலாபம் பெறுகின்றது. அதனால் 90 வீத வரி அதிகரிப்பு மேற்கொள்ளவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார அமைச்சு மீதான வரவு - செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகின்றது.  

இந்தியாவைப் போன்று நாம் பெரிய நாடு அல்ல. இந்தியாவோடு ஒப்பிடுகையில் எமது நாட்டில் மரண எண்ணிக்கை அதிகமாகும்.

ஒரு நாட்டில் ஒரு மில்லியன் பேரில் எத்தனை பேர் கொரோனா தொற்று காரணமாக மரணம் அடைந்துள்ளனர் என பார்க்கும்போது, எமது நாட்டில் ஒரு மில்லியன் பேருக்கு 664 பேர் மரணமடைந்துள்ளனர்.

அந்தத் தொகை இந்தியாவில் 334 ஆகவும் மாலைதீவில் 442ஆகவும் ஆப்கானிஸ்தானில் 182 ஆகவும் பங்களாதேஷில் 160 ஆகவும் பாகிஸ்தானில் 126 ஆகவும் காணப்படுகிறது.

அந்தவகையில் ஏனைய நாடுகளை விட, எமது நாட்டில் அதிகமானோர் கொரோனா வைரஸ் நோயினால் மரணமடைந்துள்ளர்.

இந்தியாவே கொரோனா தொற்றில் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. கொவிட் தொற்றை  கட்டுப்படுத்துவதிலும் அரசியல் தலையீடுகள் இருந்தமையே இதற்கு காரணமாகும். 

எமது நாட்டில் சுகாதாரத்துறை அரசியல் கண்ணாடி கொண்டே பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சி பதவியில் உள்ள காலத்தில் எதிர்க்கட்சி அதுபற்றி விமர்சிப்பதும் எதிர்க்கட்சி பதவியில் உள்ள காலத்தில் ஆளும் கட்சி அதுபற்றி விமர்சிப்பதுமே  இடம்பெறுகிறது.

மேலும் எமது அரசாங்க காலத்தில் சுகாதாரத்தை அமெரிக்காவின் சுகாதார தரத்துக்கு கொண்டுவந்திருந்தோம். அதற்காக சர்வதேச நிறுவனங்கள் எமது அரசாங்கத்தை பாராட்டி இருந்தது. வைத்தியசாலைகளில் 90 வீதத்துக்கும் அதிகம் மருந்து களஞ்சியப்படுத்தி இருந்தது. 

ஆனால் இன்று வைத்தியசாலைகளில் பாரியளவில் மருந்து தட்டுப்பாடு இருந்து வருகின்றது. முக்கிய பல நோய்களுக்கு வைத்தியசாலைகளில் மருந்து இல்லை. இந்த வருடம் மருந்து தேவைக்காக வரவு - செலவு திட்டத்தில் சுமார் 125 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. 

ஆனால் அடுத்த வருடம் வரவு - செலவு திட்டத்தில் மருந்து கொள்வனவுக்கு 65 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அப்படியாயின் எவ்வாறு தட்டுப்பாடு இல்லாமல் வைத்தியசாலைகளுக்கு மருந்து வழங்க முடியும்.

மேலும் அரசாங்கம் வரவு - செலவு திட்டத்தில் சிகரட் விலையை 5 ரூபாவால் அதிகரித்திருக்கின்றது. சிகரட் விலை அதிகரிப்பது அரசாங்கத்தின் வேலையல்ல. சிகரட்டுக்கான வரியை அதிகரிக்கவேண்டும். 

நாங்கள் சிகரட்டுக்கான விரியை 90 வீம் அதிகரித்தபோது புகையிலை நிறுவனங்களை மூடிவிடுவதாக தெரிவித்தனர். ஒன்றும் இடம்பெறவில்லை. நிறுவனங்கள் சிகரட் விலையை அதிகரித்தார்கள். அரசாங்கம் 5 ரூபாவால் சிகரட் விலையை அதிகரித்ததால் அரசாங்கத்துக்கு 7வீத இலாபமே இருக்கின்றது. ஆனால் நிறுவனங்களுக்கு 10 வீத இலாபம் இருக்கின்றது.

அதனால் அரசாங்கம் இரண்டு வருடங்களுக்கு பின்னர் சிகரட் விலையை 5 ரூபாவால் அதிகரித்திருக்கின்றது. விலை அதிகரிக்காமல் அரசாங்கம் சிகரட்டுக்கான வரியை 90 வீதமாக அதிகரிக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51