'சீனாவின் கடன்பொறி என்பது ஓர் மூடநம்பிக்கை' - இலங்கையை நாமே பாதுகாத்தோம் என்கிறது சீனா 

Published By: Digital Desk 3

30 Nov, 2021 | 09:25 PM
image

(நா.தனுஜா)

உகண்டாவின் விமானநிலையத்தை சீனா தன்வசப்படுத்திக்கொள்வதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவையாகும். 'கடன்பொறி' என்பது முற்றுமுழுதாக மேற்குல காலனித்துவத்தினால் கட்டியெழுப்பப்பட்டதோர் கருத்தியலாகும்.

இலங்கை அரசாங்கம் கடந்த 2017 ஆம் ஆண்டில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குவதன் ஊடாக அதற்குத் தேவையான டொலரைத் திரட்டுவதற்குத் தீர்மானித்தபோது, மேற்குலகின் 'கடன்பொறியிலிருந்து' இலங்கையை சீனா பாதுகாத்ததாக அந்நாட்டுத்தூதரகம் தெரிவித்துள்ளது.

உகண்டா அரசாங்கம் சீனாவிடம் பெற்ற கடனை மீளச்செலுத்தமுடியாத நிலையிலிருப்பதன் காரணமாக அந்நாட்டிற்குச் சொந்தமான ஒரேயொரு சர்வதேச விமானநிலையம் தற்போது சீனாவின் வசமாகியிருப்பதாக அண்மையில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதுகுறித்து உகண்டா சிவில் விமானசேவை அதிகாரசபையின் ஊடகப்பேச்சாளர் வியன்னே எம்.லுக்யா அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக விளக்கமளித்திருந்தார். 'சீனாவிடம் பெற்ற கடனுக்குப் பதிலாக எமது 'என்ரெபே' சர்வதேச விமானநிலையத்தை வழங்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். 

நாட்டின் தேசிய சொத்தை உகண்டா அரசாங்கம் வேறு தரப்பினருக்கு வழங்காது. இத்தகைய சம்பவம் இடம்பெறாது என்பதை நாம் ஏற்கனவே கூறியிருப்பதுடன் தற்போது மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம். 

ஆகவே விமானநிலையத்தை சீனாவிடம் வழங்குவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை' என்று அவர் அந்த விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது அப்பதிவை மேற்கோள்காட்டி இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. சீனத்தூதரகம் அதன் டுவிட்டர் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது,

'உகண்டாவின் விமானநிலையத்தை சீனா தன்வசப்படுத்திக்கொள்கின்றது' என்று வெளியான பொய்யான செய்தியை உகண்டா சிவில் விமானசேவை அதிகாரசபையின் ஊடகப்பேச்சாளர் 'அச்செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை' என்றுகூறி கண்டித்திருக்கின்றார். 

'கடன்பொறி' என்ற கருத்தியல் முற்றுமுழுதாக மேற்குல காலனித்துவத்தினால் கட்டமைக்கப்பட்டதுடன் இலங்கையில் அது தொடர்ச்சியாக மறுக்கப்பட்டுவந்திருக்கின்றது' என்று சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை 'சீனாவின் கடன்பொறி என்பது ஓர் முடநம்பிக்கையாகும்' என்ற தலைப்பில் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டெபோரா ப்ரோடிகமினால் எழுதப்பட்ட கட்டுரையை அனைவரும் வாசிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தூதரகம், பெய்ஜிங்கையும் அபிவிருத்தியடைந்துவரும் ஏனைய நாடுகளையும் தவறான முறையில் சித்தரிக்கும் கருத்தியல் தொடர்பில் அக்கட்டுரையில் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

'இலங்கை அரசாங்கம் கடந்த 2017 ஆம் ஆண்டில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குவதன் ஊடாக அதற்குத் தேவையான டொலரைத் திரட்டுவதற்குத் தீர்மானித்தது. அந்த நிதியை சர்வதேச பிணைமுறிகளுக்காகச் செலுத்தவேண்டியிருந்த நிலுவைத்தொகையைச் செலுத்துவதற்குப் பயன்படுத்திக்கொண்டதே தவிர, சீன எக்ஸிம் வங்கிக்குச் செலுத்தவில்லை. 

இதனை பிறிதொரு முறையில் கூறுவதாயின், மேற்குலகின் 'கடன்பொறியிலிருந்து' சீனா இலங்கையைப் பாதுகாத்தது' என்றும் இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அதன் டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமாத்திரமன்றி வெளிநாட்டுக்கடன் வழங்குனர்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட தரவுகளையும் சீனத்தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றது. 

அத்தரவுகளின்படி இலங்கைக்கான கடன்வழங்குனர்களில் சந்தை பெறுவனவுகள் 47 சதவீதமாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட கடன்கள் 13 சதவீதமாகவும் சீனாவின் கடன்கள் 10 சதவீதமாகவும் ஜப்பானின் கடன்கள் 10 சதவீதமாகவும் உலகவங்கியின் கடன்கள் 9 சதவீதமாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29