சுதந்திரக் கட்சியின் தீர்க்கமான செயற்குழுக் கூட்டம் இன்று

Published By: Digital Desk 3

30 Nov, 2021 | 04:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானமிக்க மத்திய செயற்குழு கூட்டம் இன்று கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் கருத்துக்கள் கூட்டணி அரசாங்கத்தை முழுமையாக பலவீனப்படுத்தும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கட்சி தலைமையகத்தில் விசேட செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

தேசிய பிரச்சினைகள் மற்றும் அரசியல் பிரச்சினைகள், 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும். இன்று இடம்பெறும் செயற்குழு கூட்டம் தீர்மானமிக்கதாக அமையும்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவு வழங்குவதா, இல்லையா என்ற விடயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும்.

மக்கள் எதிர்க் கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் இம்முறை வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. சுதந்திர கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் பொதுஜன பெரமுனவினர் திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள்.

கூட்டணி அரசாங்கத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் போது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்  கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளை குறிப்பாக சுதந்திர கட்சியை புறக்கணித்து கருத்துரைப்பது வழமையாகி விட்டது. அவரது கருத்துக்கள்  கூட்டணி அரசாங்கத்தை நிச்சயம் பலவீனப்படுத்தும்.

ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் சுதந்திர கட்சி அரசியல் ரீதியில் மாற்று தீர்மானத்தை முன்னெடுத்திருந்தால் பொதுஜன பெரமுன ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருக்காது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55