இலங்கையில் 15-24 வயதுடையோர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு 

Published By: Gayathri

30 Nov, 2021 | 03:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எச்.ஐ.வி. வைரஸ் தொற்று உலகளாவியரீதியில் பெரும் சுகாதார சவாலாக காணப்படுகிறது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முழு உலகமும் அவதானம் செலுத்தியுள்ள நிலையில் சர்வதேச எயிட்ஸ் தினமான இன்றைய தினத்தில் எயிட்ஸ் தொற்று குறித்து விசேட அவதானம் செலுத்துவது பிரதான விடயமாகும். 

இலங்கையில் 15 வயது தொடக்கம் 24 வயதுடைய இளம் தலைமுறையினர் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதை அண்மைய பரிசோதனைகளின்  ஊடாக அறிய முடிகிறது.

பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு செயற்றிட்டத்தின் தரவுகளுக்கமைய நாட்டில் 3,700 பேர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். அவர்களில் 2600 பேர் மாத்திரமே முறையான சிகிச்சைகளை பெற்று வருகிறார்கள்.

உலகளாவிய ரீதியில் 3,77,000,000 ஆயிரம் பேர் எச்.ஐ.வி தொற்றுடன் வாழ்கிறார்கள். இதுவரையில் சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள். 2020 ஆம் ஆண்டு மாத்திரம் 15 இலட்சம் பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 01 ஆம் திகதி உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. எச்.ஐ.விக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்படுபவர்களுக்கு ஆதரவளித்தற்கும், உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்சினையாக எச்.ஐ.வி பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்கும் இன்றைய நாள் ஒரு வாய்ப்பாக காணப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் எய்ட்ஸ் பல தசாப்த காலமாக சவால்மிக்கதாக காணப்படுகிறது. எய்ட்ஸ் ஒழிப்புக்கான சிகிச்சை முறைமையில் முன்னேற்றம் காணப்பட்டாலும் அதில் சமத்துவமற்ற தன்மை நிலவுகிறது. 

அதன் காரணமாகவே உலக சுகாதார ஸ்தாபனம் 'சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுங்கள், எய்ட்ஸ் தொற்றுக்கு முடிவு கட்டுங்கள்' என்ற தொனிப்பொருளின் கீழ் பிரசார நடவடிக்கைகளை  முன்னெடுத்துள்ளது.

எச்.ஐ.வி. அல்லது எய்ட்ஸ் தொற்றக்கூடிய ஒரு நோயாகும். இந்நோய் மிக பாரதூரமான சமூக பொருளாதார விளைவுகளை ஏற்படுத்த கூடியது. 

இலங்கையில் 1986ஆம் ஆண்டு முதலாவது எச்.ஐ.வி தொற்றுடையவர் கண்டுப்பிடிக்கப்பட்டாலும் சக்தி வாய்ந்த வினைத்திறனான கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் அதாவது வயது வந்த சாதாரண மக்களிடையே 0.1 சதவீதத்தை விட குறைந்த அளவில் காணப்படுகிறது.

ஆயினும் பல்வேறு காரணங்களினால் இலங்கையில் எச்.ஐ.வி தொற்று பரவல் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.

1987 ஆம் ஆண்டு சுவிஸ்லாந்து ஜெனீவாவில் உள்ள உலக  சுகாதார தாபனத்தில் எயிட்ஸ் தொடர்பான பூகோளிய செயற்றிட்டம் பொதுமக்கள் கருத்து செயற்திட்ட அதிகாரிகளான ஜெம்ஸ் ஒப்பன் , தோமஸ் நெட்டர் ஆகியோரால் முன்வைக்கப்பட்டது. இதற்கமைய டிசெம்பர் 1 ஆம் திகதி  சர்வதேச எயிட்ஸ் தினம் என பிரகடனப்படுத்தப்பட்டது.

1988 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதம் 1 ஆம் திகதி சர்வதேச எயிட்ஸ் தினத்தையொட்டிய விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.இலங்கையிலும் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.

பூகோள மட்டத்தில் எயிட்ஸ் தொற்றை இல்லாதொழித்தல் நிலைபேறான கொள்கையின் பிரதான இலக்காகும். 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய மட்டத்தில் எயிட்ஸ் தொற்றை இல்லாதொழிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் எயிட்ஸ் தொற்றை இல்லாதொழிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுவே பிரதான இலக்காகும்.

உலகளாவிய மட்டத்தில் எயிட்ஸ் தொற்றால் 37 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு வருடத்தில் மாத்திரம் 1.7 மில்லியன் பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள். இலங்கையில் இந்த எண்ணிக்கை நூற்றுக்கு 1 சதவீதத்தை விட குறைவான மட்டத்தில் உள்ளது.

பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளும், கவனயீனமும் எச்.ஐ.வி தொற்றுக்கு பிரதான காரணியாக அமைகிறது. இலங்கையில் இதுவரையான காலத்தில் 4,142 பேர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். அவர்களில் 3,700 பேர் எச்.ஐ.வி தொற்றுடன் வாழ்கிறார்கள்.

இலங்கையில் 1986 ஆம் ஆண்டு முதலாவது எச்.ஐ.வி தொற்றுடையவர் அடையாளம் காணப்பட்டார். 2020ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளை அடிப்படையாகக் கொண்ட தரவுகளுக்கமைய 15 வயது தொடக்கம் 24 வயதுடைய இளம் தலைமுறையினர் மத்தியில் எச்.ஐ.வி. வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

இளம் தலைமுறையினர் மத்தியில் பாலியல் நோய் தொடர்பில் முழுமையான தெளிவின்மை காரணமாக இந்நிலை காணப்படுகிறது.

அண்மைகால ஆய்வுகளுக்கமைய கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் தென்மாகாணம் ஆகிய பகுதிகளில் எச்.ஐ.வி வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதை காணமுடிகிறது.

வைரஸ் தொற்றாளர்களில் பெண்களை காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் உள்ளது. முறையான சிகிச்சையினை பெற்றுக் கொண்டால் எச்.ஐ.வி எய்ட்ஸ் நிலைமையை  அடைவதை தவிர்க்க முடியும்.

எச்.ஐ.வி தொற்றுக்கான அறிகுறிகள் ஆரம்பத்தில் இலகுவில் வெளிப்படாது. 5 அல்லது 7 வருடங்களுக்கு பின்னர் எய்ட்ஸ் நிலைமையை அடைந்ததும் நோயின் அறிகுறிகள் வெளிப்படும்.

சமூக புரிதல்கள் ஊடாகவே இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். எச்.ஐ.வி தொற்று ஆரம்பக்கட்டத்தில் இனங்கண்டு அதற்கான சிகிச்சைகளை முறையாக பெற்றுக்கொண்டால் எய்ட்ஸ் நிலைக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளலாம்.

தான் ஒரு எச்.ஐ.வி தொற்றாளர் என்பது சமூகத்திற்கு தெரிய வந்தால் ஒதுக்கப்படுவோம் என எண்ணி பலர் முறையான பரிசோதனைகளை முன்னெடுப்பதில்லை. இது முற்றிலும் தவறானதாகும்.

முதலில் அவ்வாறான குறுகிய மனநிலையில் இருந்து வெளிவர வேண்டும். பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளில் ஈடுப்பட்டிருப்பின் நிச்சயம் எச்.ஐ.வி பரிசோதனைகளை செய்துக்கொள்வது அவசியமாகும். தொற்று நோய்கள் தீவிரமடைவதற்கு பிரதான காரணம் கவனயீனமாகும்.

எச்.ஐ.வி நோயை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடுதழுவிய ரீதியில் பரிசோதனை மத்திய நிலையங்கள் செயற்பாட்டில் உள்ளன.

எச்.ஐ.வி தொற்றை 2025 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக கட்டுப்படுத்தும் இலக்கினை அடையும் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. திட்டங்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38