மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று காலை ஓட்டமாவடியில் இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

டாக்டர் பதியுதீன் மாவத்தை ஓட்டமாவடி இல.1 சேர்ந்த முகம்மது அலியார் செய்யது இப்றாகிம் (45) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். 

இன்று காலை மேற்படி நபர் ரயில் பாதை அருகாமையினால் நடந்து செல்லும்போது ரயிலில் ஏறும் படிக்கட்டு பகுதி உடலில் அடிபட்டதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பத்தினை நேரில் பார்த்த பொது மக்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.