இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில்

Published By: Vishnu

30 Nov, 2021 | 12:33 PM
image

(என்.வீ.ஏ.)

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் கான்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திங்களன்று வெற்றிதோல்வியின்றி முடிவுக்கு வந்தது.

இப் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த நியூஸிலாந்து, இந்திய வம்சாவளிகளான ராக்கின் ரவிந்த்ரா, அஜாஸ் பட்டேல் ஆகியோரின் மிகக் கவனமான துடுப்பாட்டங்களின் உதவியுடன் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 284 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து, அன்றைய தினம் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது ஒரு விக்கெட்டை இழந்து 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் கடைசி நாளான திங்கட்கிழமை தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூஸிலாந்து, மதிய போசன இடைவேளையின்போது மேலதிக விக்கெட் இழப்பின்றி 79 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.

ஆனால், இடைவேளையின் பின்னர் மொத்த எண்ணிக்கைக்கு 46 ஓட்டங்கள் மாத்திரம் சேர்ந்த நிலையில் 3 விக்கெட்களை இழந்த நியூஸிலாந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

போட்டியில் மேலும் 8.4 ஓவர்கள் மீதமிருந்தபோது 9ஆவது விக்கெட்டை இழந்த நியூஸிலாந்து தோல்வியை சந்திக்கும் என கருதப்பட்டது.

ஆனால், ராக்கின் ரவிந்த்ராவும் அஜாஸ் பட்டேலும் மிகவும் கவனமாக துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்தை தோல்வியிலிருந்து காப்பாற்றினர்.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப் போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்டிருந்தது.

எண்ணிக்கை சுருக்கம்

இந்தியா 1ஆவது இன்: 345 (ஷ்ரேயாஸ் ஐயர் 105, ஷுப்மான் கில் 52, ரவிந்த்ர ஜடேஜா 50, ரவிச்சந்திரன் அஷ்வின் 38, டிம் சௌதீ 69 - 5 விக்., கய்ல் ஜெமிசன் 91 - 3 விக்.)

நியூஸிலாந்து 1ஆவது இன்: 296 (டொம் லெதம் 95, வில் யங் 89, அக்சார் பட்டேல் 62 - 5 விக்., ரவிச்சந்திரன் அஷ்வின் 82 - 3 விக்.)

இந்தியா 2ஆவது இன்: 234 - 7 விக். டிக்ளயார்ட் (ஷ்ரேயாஸ் ஐயர் 65, ரிதிமான் சஹா 61 ஆ.இ., ரவிச்சந்திரன் அஷ்வின் 32, கய்ல் ஜெமிசன் 40 - 3 விக்., டிம் சௌதீ 75 - 3 விக்.)

நியூஸிலாந்து 2ஆவது இன்: ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 165 - 9 விக். (டொம் லெதம் 52, வில்லியம் சமர்வில் 36, ரவிந்த்ர ஜடேஜா 40 - 4 விக்., ரவிச்சந்திரன் அஷ்வின் 35 - 3 விக்.)

ஆட்டநாயகன்: ஷ்ரேயாஸ் ஐயர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58