2021 சுப்பர் லீக் கால்பந்தாட்டம்; அப்கன்ட்றி லயன்ஸ் அணியின் அவசியமான வெற்றி

Published By: Vishnu

30 Nov, 2021 | 08:42 AM
image

(நெவில் அன்தனி)

டிபெண்டர்ஸ் எவ்சிக்கு எதிராக கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (29) மாலை நடைபெற்ற சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் காலித் அஸ்மில் வெளிப்படுத்திய அற்புத ஆற்றல்களின் உதவியுடன் 2 - 0 என்ற கோல்கள் அடிப்படையில் அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் வெற்றிபெற்றது.

அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் போட்ட இரண்டு கோல்களிலும் அஸ்மிலின் பங்களிப்பு இருந்தமை விசேட அம்சமாகும். ஒரு கோல் போடப்படுவதில் பங்காற்றிய அஸ்மில், மற்றைய கோலை அவராகவே போட்டார்.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டி ஆரம்பித்ததும் டிபெண்டர்ஸ் எவ்சியின் ஆதிக்கம் வெளிப்பட்டது. அப்கன்ட்றி லயன்ஸ் கோல் எல்லையை டிபெண்டர்ஸ் எவ்சி ஆக்கிரமித்தபோதிலும் அப்கன்ட்றி லயன்ஸ் தலைவரும் கோல்காப்பாளருமான சுஜான் பெரேரா, எதிரணியின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி தனது அணியைக் காப்பாற்றிய வண்ணம் இருந்தார்.

போட்டியின் 26 ஆவது நிமிடத்தில் டிபெண்டர்ஸ் எவ்சி எல்லையில் 25 யார் தூரத்திலிருந்து கிடைக்கப்பெற்ற ப்றீ கிக்கை காலித் அஸ்மில், பந்து வளைந்து   செல்லும் வகையில் மிகவும் இலாவகமாக உதைத்தார். டிபெண்ட்டர்ஸ் கோலை நோக்கிச் சென்ற பந்தை அணித் தலைவரும் பின்கள வீரருமான ஜேசுராஜ் பேர்னார்ட் தலையால் முட்டி திசை திருப்ப முயற்சித்தார். ஆனால் அவரது துரதிருஷ்டம் பந்து அவரது சொந்த கோலினுள்ளேயே சென்றது.

இந்த இனாம் கோல் மூலம் உற்சாகம் அடைந்த அப்கன்ட்றி லயன்ஸ் வீரர்கள் எதிரணியின் கோல் எல்லையை தொடர்ச்சியாக ஆக்கிரமித்த வண்ணம் இருந்தனர். ஆனால் இடைவேளை வரை எந்த மேலதிக கோல் எதுவும்  போடவில்லை.

இடைவெளையின் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த டிபெண்டர்ஸ் எவ்சி முயற்சித்ததுடன் அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சித்தது.

போட்டியில் 4 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது வலது பக்கத்திலிருந்து கிடைத்த கோர்ணர் உதையை வளைந்து செல்லும் வகையில் அஸ்மில் இடதுகாலால் உதைக்க, அப் பந்து கோலினுள் புகுந்தது.

இதன் மூலம் 2 - 0 என்ற கோல் அடிப்படையில் அப்கன்ட்றி லயன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

No photo description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35