மழையினால் பாதிக்கப்பட்ட 2 ஆவது டெஸ்டில் இலங்கை சிறப்பான ஆரம்பம்

Published By: Vishnu

30 Nov, 2021 | 08:34 AM
image

(என்.வீ.ஏ.)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (29) ஆரம்பமான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை, முதலாம் நாள் ஆட்டநேர முடிவின்போது அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

Story Image

மழை காரணமாக முதலாவது ஆட்ட நேர பகுதியும் இரண்டாவது ஆட்டநேர பகுதியும் கைவிடப்பட்ட நிலையில் பிற்பகல் 3.00 மணிக்கு போட்டி ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மன்த சமீரவுக்குப் பதிலாக சகலதுறை ஆட்டக்காரர் சரித் அசலன்க அறிமுக வீரராக டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். இவர் இலங்கை அணியில் இடம்பிடித்த 157 ஆவது டெஸ்ட் வீரராவார்.

முதலாம் நாள் ஆட்டத்தில் ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரத்ன ஆகிய இருவரும் 106 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பெத்தும் நிஸ்ஸன்க தனது 6 ஆவது டெஸ்ட் போட்டியில் 3 ஆவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்து 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

திமுத் கருணாரட்ன 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக தொடர்ச்சியான 7 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அரைச் சதங்கள் குவித்தவர்களுக்கான உலக சாதனையை சமன் செய்ய திமுத் கருணாரத்னவினால் முடியாமல் போனது.

Image

நேற்றைய ஆட்டத்தில் 45 ஓவர்கள் வீசப்படுவதாக இருந்தபோதிலும் போதிய வெளிச்சமின்மை காரணமாக 33.4 ஓவர்களுடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

நிஸ்ஸன்கவுடன் ஓஷத பெர்னாண்டோ 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

முதலாம் நாள் ஆட்டத்தில் மழை காரணமாக விரயமான நேரத்தை ஈடு செய்யும் வகையில் இன்று முதல் நான்கு தினங்களுக்கான  ஆட்டத்தை 15 நிமிடங்கள் முன்கூட்டியே ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பந்துவீச்சில் ரொஸ்டன் சேஸ் 33 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி இருந்தார்.

இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20