முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் - சபையில் தமிழ் கட்சி எம்.பி.க்கள் கண்டனம்

Published By: Digital Desk 4

30 Nov, 2021 | 06:44 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

முல்லைத்தீவில் செய்தி சேகரிக்க சென்ற  ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ் கட்சி எம்.பிக்கள் சபையில் கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதல் |  Virakesari.lk

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (29)  இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு ,வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.க்களான செல்வம் அடைக்கலநாதன் ,  சார்ள்ஸ் நிர்மலநாதன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராஜா செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டனர்.

சனிக்கிழமை  காலை  முல்லைத்தீவு மாவட்ட  ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் என்பவர்  முள்ளியவாய்க்கால் கிழக்கில்    காலை செய்தி சேகரிப்பிற்காக   சென்று அங்கிருந்து வீடு திரும்பிய நிலையில்  முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் பெயர் பலகையினை ஒளிப்படம் எடுத்துள்ளபோது அந்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட நான்கு இராணுவத்தினர் குறிப்பிட்ட  ஊடகவியலாளர்  மீது முள்ளு கம்பி  சுற்றப்பட்ட  பச்சை பனை மட்டை யினால் தாக்குதல் நடத்தியமை மிருகத்தனமானது எனவும் இவர்கள் குற்றம்சாட்டினார்.

அத்துடன் தாக்குதல் நடத்திய  3 இராணுவத்தினர் கண் துடைப்புக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் கூட ஆஜர் செய்யப்பட்டது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் குற்றம்சாட்டிய தமிழ் எம்.பி.க்கள் ,நாட்டில் இராணுவ ஆட்சி நடப்பதற்கு  இந்த தாக்குதல்  சிறந்த உதாரணம் எனவும் குறிப்பிட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04