எரிவாயு வெடித்து பெண் உயிரிழக்கவில்லை : அது ஒரு தற்கொலை ; வெலிகந்த சம்பவம் குறித்து பொலிஸ் பேச்சாளர்   

Published By: Digital Desk 4

30 Nov, 2021 | 06:36 AM
image

(எம்.மனோசித்ரா)

பொலன்னறுவை மாவட்டம் வெலிகந்த - சுதுன்பிட்டி பிரதேசத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மரணத்திற்கு சமையல் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்பு காரணமல்ல என்பது பொலிஸாரின் விசாரணகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Local News | Virakesari

அத்தோடு உயிரிழந்த பெண் அவரது கணவனுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக உடலில் தீமூட்டி தற்கொலைக்கு முயற்சித்துள்ளமை இது வரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த 13 ஆம் திகதி வெலிகந்த பொலிஸ் பிரிவில் சந்துன்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த அயேஷh குமுதினி என்ற 19 வயது பெண் உடலில் தீப்பற்றிய காயங்களுடன் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 24 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

குறித்த பெண்ணின் உயிரிழப்பிற்கு எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இது தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , சம்பவம் இடம்பெற்ற தினத்தன்றும் அதற்கு முன்னரும் குறித்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற தினமான கடந்த 13 ஆம் திகதி பெண்ணின் கனவன் தொழிலுக்குச் சென்று சிறிது நேரத்தின் பின்னர் அவருக்கு காணொளி தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு , தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தான் தீமூட்டிக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கணவன் துரிதமாக வீட்டிற்குச் சென்ற போதிலும், பெண்ணில் உடலில் முழுமையாக தீப்பற்றி எரிந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு வீட்டிலிருந்த சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் உள்ளிட்ட வேறு எந்தவொரு பொருளிலும் தீப்பற்றிருக்கவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொலன்னறுவை ஸ்தள குற்ற விசாரணைப் பிரிவினரால் சம்பவம் இடம்பெற்ற இடம் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. அவர்களது பரிசோதனைகளிலும் குறித்த வீட்டில் எந்தவொரு வெடிப்பு சம்பவமும் இடம்பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.

அதற்கமைய பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சகல விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பெண் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த மரணத்திற்கு சமையல் எரிவாயு கசிவு காரணமல்ல என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:38:19
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02