கோதுமை மாவின் விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிப்பு

Published By: Gayathri

29 Nov, 2021 | 08:16 PM
image

கோதுமை மாவின் விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச் சூழ்நிலையில் திடீரென 17 ரூபாய் 50 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம்மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

ஒரு தொழிலாளியின் வீட்டில் ஒரு நாளுக்கு 3 அல்லது 5 கிலோ வரை கோதுமை மாவை தனது உணவிற்காக பயன்படுத்துகின்றார்கள்.

 

பொருட்களின் விலைகளை அதிகரித்ததனை தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தோட்டத்தொழிலாளரகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கோதுமை மா அதிகரிப்பின் காரணமாக கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் அனைத்து பேக்கரி உணவு பொருட்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தோட்டத் தொழிலாளர்கள் தங்களது நாளாந்த உணவின் பெரும் பகுதியினை கோதுமை மாவின் மூலமே பூர்த்திசெய்து வருகின்றனர்.

காலை வேளையிலும், இரவு வேளையிலும்  அவர்களுக்குரிய நேரத்திற்கு ஏற்ப கோதுமை மாவினை பயன்படுத்தியே அவர்கள் தங்களுக்கு தேவையான உணவினை தயாரித்து கொள்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் குறைந்த சம்பளம் பெரும் இவர்கள்  தற்போது அதிகரிக்கப்பட்ட மாவின் விலை காரணமாக தாங்கள் மேலும் மேலும் பொருளாதார சுமைக்கு தள்ளப்படுவதாகவும், பொருட்களின் விலை அதிகரிப்பு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று தோட்ட நிர்வாகத்தால் வாரத்தில் 3 நாட்கள் அல்லது 4 நாட்கள் மாத்திரமே வேலை வழங்குகின்றனர். இதன் காரணமாக இம்மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தோட்ட தொழிலாளர்களின் பொருளாதாரத்தை நலன் கருதி கோதுமை மாவை மானிய விலையில் வழங்குவதற்கும், நிவாரணம் வழங்குவதற்கும், பொருட்களின் விலைவாசியை அதிகரிக்காமல் இருப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01