போலிச் செய்திகள் தொடர்பான வழிகாட்டல் கையேடு வெளியீடு

Published By: Digital Desk 2

29 Nov, 2021 | 07:51 PM
image

போலிச் செய்திகள் தொடர்பான வழிகாட்டல் கையேடு விடியல் இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் முதற்பிரதி வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலியினால் அண்மையில் ஊடக அமைச்சில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

போலிச் செய்திகள் தொடர்பில் விழிப்புணர்வினை மேற்கொள்ளும் நோக்கில் இதுவரை தமிழ் மொழி மூலம் எந்தவொரு கையேடும் வெளிவராத நிலையில், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்களை அடிப்படையாக வைத்தே இக்கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை வெளியிடுவதற்கான அனுசரணையை நீலன் திருச்செல்வம் மன்றம் வழங்கியிருந்தது.

இந்த கையேட்டினை இலவசமாக பெறவிரும்புவோர் 0779595972 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, "கொவிட் 19 போலிச் செய்திகள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பான கட்டுக் கதைகளிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்" எனும் தலைப்பில் ஏற்கனவே விடியல் இணையத்தளம் 11 இணையவழி செயலமர்வுகளையும் 'பிறை எப்.எம்' ஊடாக நான்கு வானொலிக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் நடாத்தியுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்  வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, விடியல் இணையத்தளத்தினால் வெளியிடப்பட்ட கையேட்டினை பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56