தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலை வரை எரிபொருள் தாங்கி ஏற்றிச் சென்ற ரயில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் தடம் புரண்டிருந்தது.

தற்போது ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாகவும் நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

(க.கிஷாந்தன்)