5 ஆவது மாடியில் இருந்து விழுந்த ஹோட்டல் முகாமையாளர் பரிதாபமாக பலி

Published By: Gayathri

29 Nov, 2021 | 01:26 PM
image

நுவரெலியாவில் சுற்றுலா விடுதி ஒன்றில் ஊழியர்கள் தங்கியிருந்த ஐந்தாவது மாடி அறையில் இருந்து விழுந்து ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம்  இன்று (29.11.2021) அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்  47 வயதுடைய கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தரங்க பியதர்ஷன ஹெட்டியாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மேற்படி சுற்றுலா விடுதியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார்.

அவர் தங்கியிருந்த ஐந்தாவது மாடியில் உள்ள அறையின் ஜன்னல் வழியே தவறி விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மரண விசாரணைகளின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33