அருட்தந்தையர்கள் அரசியல் கைப்பாவைகளாக மாறக்கூடாது - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Published By: Digital Desk 4

28 Nov, 2021 | 10:14 PM
image

(எம்.மனோசித்ரா)

அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்த கூற்று  தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றன. அரசியல் கைப்பாவையாக மாற வேண்டாம் என்று அருட் தந்தைகளை கேட்டுக் கொள்வதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Articles Tagged Under: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ | Virakesari.lk

கட்டுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சமையல் எரிவாயு கசிவினால் ஏற்படும் வெடிப்பு சம்பவங்களால் நாட்டில் எவரும் உயிரிழக்கவில்லை. பொலன்னறுவை பிரதேசத்தில் சமையல் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர் இறப்பதற்கு முன்னர் விபத்து தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.

இது போன்ற விடயங்களின் உண்மையை ஆராயந்து செய்திகளை வெளியிட வேண்டும். நாட்டில் பெற்றோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இருப்பதாக  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தேசிய ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஆனந்த  பாலித்த   அண்மையில் தெரிவித்திருந்தார். அது மக்களை வரிசையில் காத்திருக்க வைத்தது.  ஆனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்த கூற்று  தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

பொதுமக்கள் அல்லது மதகுருமார்கள் கூறும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பது சி.ஐ.டி.யின் பணியும் கடமையும் ஆகும். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளாதிருந்தால் இந்த அறிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை  என எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியிருக்கும். அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக சட்டம் பயன்படுத்தப்படவில்லை. அரசியல் கைப்பாவையாக மாற வேண்டாம் என்று அருட் தந்தைகளை கேட்டுக் கொள்கிறேன்.

1971 இல் ஜே.ஆர்.ஜயவர்தன எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது  சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு உதவுவதாகக் கூறினார்.

ஆனால் இன்றுள்ள எதிர்க்கட்சி அவ்வாறு  இல்லை. நாடு முன்னேற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொவிட் காலத்தில் தடுப்பூசியைப் பெறுவதற்காக வருகை தந்தவர்களே தற்போது அந்தந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர்.

இதனை நாட்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக எதிர்க்கட்சி திரிபுபடுத்துகிறது. தற்போது வெளிநாடு செல்லும் மக்களை நாம் வணங்க வேண்டும். அவர்களிடமிருந்து வரும் டொலர்களால்தான் நாட்டிற்கு எண்ணெய் கூட இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த மக்களைத் தான்  நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் என்று  அவமானப்படுத்தியுள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44