80 வயது முதிர்ச்சியான தோற்றத்தில் பிறந்த குழந்தை

Published By: Raam

27 Sep, 2016 | 11:01 AM
image

பங்களாதேஷத்தில் 80 வயது முதிர்ச்சியான தோற்றதுடன் பிறந்த ஆண் குழந்தை மக்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷம் மாகுரா மாவட்டத்தில் நேற்றுமுன் தினம் ஆண் குழந்தையொன்று முதிர்ச்சியான தோற்றத்துடன் பிறந்துள்ளது.

குறித்த முதிர்வு தோற்றதுடன் பிறந்த அக் குழந்தை காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.குழந்தையின் முகம், கண்கள் மற்றும் சுருங்கிய தோல் என உடலின் அனைத்து பாகங்களும் முதிர்ச்சியான தோற்றத்துடன் காணப்படுகிறது.

‘முதிராமுதுமை’ என கூறப்படும் குறைபாட்டுடன் பிறந்த அந்த குழந்தை இயல்பான வளர்ச்சியை விட எட்டு மடங்கு வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, உடலில் உருவாகும் அசாதரண புரோட்டின்களை, உடலில் உள்ள செல்கள் பயன்படுத்திக்கொள்கையில் இக் குறைபாடு ஏற்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வருடமும் 4 மில்லியன் குழந்தைகள் இதுபோன்ற குறைபாட்டால் பிறக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right