பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 7 பேர்ச் காணி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?- உதயகுமார் சபையில் கேள்வி

28 Nov, 2021 | 05:57 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கடந்த அரசாங்க காலத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணி, காணி சீர்திருத்த ஆணைக்குழு ஊடாக உரித்துரிமையாக வழங்கப்பட்டது. 

அதனை சபையிலும் சபைக்கு வெளியிலும் சிலர் நிராகரித்து வருகின்றனர். இதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அரசாங்கம் அறிவிக்கவேண்டும். அதேபோன்று தோட்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்தில் வீடொன்றை கட்டி வாழ்வதற்கான உரிமையை அரசாங்கம் வழங்கவேண்டும் என எம். உதயகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (27) இடம்பெற்ற பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, காணி அமைச்சு உள்ளிட்ட 3 ராஜாங்க அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

நாட்டுக்கு அதிகளவில் டொலர்களை பெற்றுக்காெடுக்கும் பெருந்தோட்டத்துறையை வினைத்திரனுடன் முன்னேற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்காவிட்டால் தேயிலைத்துறை அழிவுப்பாதைக்கு செல்வதை யாராலும் தடு்க்க முடியாமல்போகும். அதில் இருக்கும் குறைபாடுகளை நீக்கி, அதனை முன்னேற்றத்தின் பாதையில் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். 

தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் பிரச்சினை தொடர்பாகவும் கூட்டு ஒப்பந்தம் ஊடாக ஒருசில தொழிற்சங்கங்கள் மாத்திரம் கூடி முடிவெடுத்துவந்த நிலையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் சம்பள நிர்ணய சபைக்கு சென்று,  தற்போது ஆயிரம் ரூபா சம்பளம் வங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதுதொடர்பாக வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

என்றாலும் ஆயிரம் ரூபா தொழிலாளர்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. அதற்கு என்ன நடந்தது? வர்த்தமானி அறிவிப்புகளை விடுத்து அதனை வாபஸ் பெறுவதில் சாதனை படைத்துள்ள அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கவேண்டும் என்ற வர்த்தமானி அறிவிப்பையும் மீள பெறப்போவதாக  தெரியவருகின்றது. 

இதன் உண்மைத் தன்மையை அரசாங்கம் சபைக்கு வெளிப்படுத்தவேண்டும். ஏனெனில் கம்பனி உரிமையாளர்களுக்கும் தொழிலாளர்களும் முரண்பாட்டை ஏற்படுத்தி, கூட்டு ஒப்பந்தம் இல்லாததனால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் என தெரிவித்து மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்கு செல்லும் சதியாகவே இதனை காண்கின்றேன். 

கூட்டு ஒப்பந்த முறை தோல்வியடைந்தமையால்தான் சம்பள நிர்ணய சபையினால் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் மலையகத்தில் பெருந்தோட்ட காணிகளில் குறிப்பாக மெளன்ஜின் தோட்டத்தில் தேயிலை செடிகள் பிடுங்கப்பட்டு, மரங்கள் வெட்டப்படு மாற்றுத்தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு தேயிலை தோட்டங்கள் அழிக்கப்பட்டுகின்றன. 

வியாபார நோக்கத்துக்காக தேயிலை செடிகளை பிடுங்கி அழிக்க முற்படும் அரசாங்கம் , நாட்டுக்காக உழைத்துவரும் தோட்ட மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வீடு கட்டுவதற்கு தாேட்ட காணிகளில் தேயிலை செடிகளை பிடுக்க முடியாது என தெரிவிப்பது எந்தளவு நியாயமானது என கேட்கின்றேன். 

இதுதொடர்பில் அரசாங்கத்தின் மனசாட்சி உறுத்தவில்லையா. பெருந்தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களுக்கு அவர்களுக்கென சிறிய காணித்துண்டில் வீடு கட்டிக்கொள்ள கம்பனிகள் இடமளிப்பதில்லை.

மேலும் கடந்த அரசாங்க காலத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 7பேர்ச் காணி, காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் உரித்துரிமையாக வழங்கப்பட்டதை அதிகாமானவர்கள் அதனை மறுத்துவருகின்றனர். அவ்வாறு வழங்கப்பட்ட காணி உரித்துகளின் உண்மைத்தன்மை என்ன என்பதை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி...

2024-04-18 16:36:22