மன்னாரில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் நினைவேந்தல்

27 Nov, 2021 | 10:27 PM
image

 மன்னார் மாவட்டத்தில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்று சனிக்கிழமை மாலை 6.15 மணி அளவில் சுடர் ஏற்றி தாயக விடுதலைக்காக மரணித்தவர்களுக்கு நினைவேந்தல் செலுத்தப்பட்டது.

இன்று (27) காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவீரர் தினத்தை கட்டுப்படுத்தும் வகையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்த பட்டுருந்த நிலையில் தமிழர் தேசிய  வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமையில் மாவீரர்களுக்கான நினைவு அஞ்சலி இடம் பெற்றது. 

இதன் போது அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார், மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,,மன்னார் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் நினைவேந்தல்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.

இதன் போது மாலை  தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மாவீரர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21