அபிவிருத்திக்காக காணிகளை உரிமையுடன்  மத்திய அரசுக்கு வழங்கமுடியாது ; வட மாகாண முதல்வர்

Published By: Priyatharshan

26 Sep, 2016 | 04:52 PM
image

(எஸ்.என்.நிபோஜன்)

அபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை உரிமத்துடன் மத்திய அரசுக்கு வழங்க முடியாது அது எதிர்காலத்தில் வேறு தேவைகளுக்குபயன்படக் கூடும் என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று 26-09-2016 மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இருபதெட்டு விடயங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்ட போதும் நீர்வழங்கல், மின்சாரம், வீதி, மீன்பிடி, விவசாயம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, ஆகிய எட்டு விடயங்கள் மாத்திரமே ஆராயப்பட்டது. 

மேற்படி  ஆராயப்பட்ட விடயங்களில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற அபிவிருத்திப் பணிகள் மற்றும் அதன் குறை நிறைகள் என்பன ஆராயப்பட்டது. 

இதன் போது கருத்து தெரிவித்த முதலமைச்சர்,

மத்திய அரசு மாகாண அரசுக்கோ. மாவட்டச் செயலகங்களுக்கோ தெரியாது பல பணிகளை முன்னெடுத்து வந்துள்ளது  எனத் தெரிவித்த அவர் , மத்திய அரசுக்கு அபிவிருத்தி திட்டங்களுக்காக  மாகாணத்திற்குள் காணிகளை  உரிமத்துடன் வழங்க முடியாது என்றும் அவ்வாறு வழங்குதல் எதிர்காலத்தில் வேறு பல பிரச்சினைகளை கொண்டு வரக்கூடும். ஆதாவது  அவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற தற்போதைய அபிவிருத்திகள் வெற்றியளிக்கவில்லை என்று கூறிவிட்டு அவர்கள் வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். இது விரும்பத்தக்கது அல்ல  எனவும் தெரிவித்தார். 

மேலும் மாங்குளத்தில் கூட பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு காணியை நீண்ட கால குத்தகைக்கு தரலாம் என்றே நாங்கள் மத்திய அரசுக்கு தெரிவித்திருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வட மாகாண அமைச்சர்களான டெனீஸ்வரன், ஜங்கரநேசன், சத்தியலிங்கம், குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர்களான தவநாதன், அரியரட்னம் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10