கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனை படைத்தார் சச்சினி பெரேரா 

Published By: Gayathri

25 Nov, 2021 | 08:33 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கையின் கோலூன்றிப் பாய்தல் வீராங்கனையான சச்சினி பெரேரா 3.60 மீற்றர் உயரம் பாய்ந்து பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனையைப் படைத்தார். 

57 ஆவது இராணுவ மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு தேசிய சாதனையும், 3 இலங்கை இராணுவ மெய்வல்லுநர் போட்டிச் சாதனையும் நிகழ்த்தப்பட்டுள்ளன. 

இதில் பெண்களுக்கான  கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பங்கேற்ற இலங்கை இராணுவத்தின்  சமிக்‍ஞை படையணியைச் சேர்ந்த சச்சினி பெரேரா 3.60 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்துடன், தேசிய சாதனையையும் படைத்தார். இது இலங்கை இராணுவ மெய்வல்லுநர் போட்டி சாதனையாகவும் பதிவாகியிருந்தது.

இதேவேளை, இலங்கை  இராணுவத்தின் இலத்திரனியல் படையணியில் ‍கடமையாற்றும்  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏ. புவிதரன் மற்றும் இலங்கை இராணுவத்தின்  சேவைப் படையணின் எச்.எஸ்.ஈ.ஜனித் இருவரும் ஆண்களுக்கான ‍கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 5.00 மீற்றர் உயரம் பாய்ந்து இலங்கை இராணுவ மெய்வல்லுநர் சாதனையை பகிர்ந்துக்கொண்டனர்.

ஆண்களுக்கான 4 தர 200 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியை  1நிமிடம் 23:74 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் படையணியினர் இலங்கை இராணுவ மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் சாதனையை படைத்திருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35