பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ! நெதர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் 'ஒரேன்ஞ் த வேல்ட்' பிரசாரம்

Published By: Digital Desk 4

25 Nov, 2021 | 05:44 PM
image

(நா.தனுஜா)

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அவற்றை முடிவிற்குக்கொண்டுவருவதையும் இலக்காகக்கொண்டு இலங்கையிலுள்ள நெதர்லாந்து தூதரகத்தினால் இன்றைய தினம் வியாழக்கிழமை 'ஒரேன்ஞ் த வேல்ட்' என்ற பிரசாரம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது.

No description available.

உலகளாவிய ரீதியில் மூன்று பெண்களில் ஒருவர் என்ற அடிப்படையில் பெண்கள் தமது வாழ்நாளில் உடலியல் அல்லது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றார்கள். எனவே இத்தகைய பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு கடந்த 1991 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச ரீதியில் 'ஒரேன்ஞ் த வேல்ட்' என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. 

அதன் ஓரங்கமாகவே இலங்கையிலுள்ள நெதர்லாந்து தூதரகத்தினால் நேற்றை தினம் 'ஒரேன்ஞ் த வேல்ட் : பாலின ரீதியான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் பிரசாரம்' என்ற முன்னெடுக்கப்பட்டது.

.No description available.

அப்பிரசாரத்தின்படி 'பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்ப்போம்' என்று ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு சைக்கிளில் பயணித்த இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் தன்ஜா கொன்க்ரிஜ்ப், கொழும்பிலுள்ள ஏனைய தூதரகங்கள் மற்றும் சர்வதேச கட்டமைப்புக்களின் அலுவலகங்களுக்குச் சென்று அவற்றின் முகப்பில் மேற்படி பதாகையைக் காட்சிப்படுத்தினார். அவருடன் தூதரக அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்துகொண்டனர்.

நெதர்லாந்து தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்ட மேற்படி பிரசாரத்தின்கீழ் 'பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்ப்போம்' என்ற பதாகை இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், கனேடியத்தூதரகம், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், பிரான்ஸ் தூதரகம் மற்றும் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் ஆகியவற்றின் முன்றலில் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38