ஃபஷன் பக்கின் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம் காலியில் வெற்றிகரமாக நிறைவு

Published By: Priyatharshan

26 Sep, 2016 | 03:59 PM
image

பாடசாலைக்கல்வியை பூர்த்தி செய்த பின்னர், தொழில் வழிகாட்டலை ஏற்படுத்துவதற்கு நாடு முழுவதும் 16 காட்சியறைகளைக் கொண்ட இலங்கையின் முன்னணி ஆடைகள் விற்பனைத்தொடரான ஃபஷன் பக், காலி  தொழிற்பயிற்சி நிலையத்துடன் இணைந்து தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

காலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், அண்மையில் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் தோற்றிய 4000 க்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் வளவாளராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் மற்றும் விருத்தி பணிப்பாளர் அஜித் குணவர்தன பங்கேற்றிருந்தார். 

மாகாண கல்வி அமைச்சர் (தென் மாகாணம்) சந்திம ராசபுத்ர விசேட விரிவுரையை வழங்கியிருந்ததுடன் காலி தொழிற்பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் பிரபாத் பாலசூரிய மற்றும் மேலதிக மாவட்ட செயலாளரான மாலனி லொகுபொதகம ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்றியிருந்தனர்.

ஃபஷன் பக் பணிப்பாளரும் மற்றும் சிசு திரிமக மையத்தின் ஸ்தாபகருமான சபீர் சுபியன் கருத்து தெரிவிக்கையில்,

“காலியில் எமது தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சியை முன்னெடுத்திருந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இதில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவான மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதில் பங்குபற்றிய மாணவர்கள் மத்தியில் காணப்பட்ட ஆர்வத்தை காணும் போது பெருமளவு ஊக்கமளிப்பதாக அமைந்திருந்தது. மேலும் ஒவ்வொரு சமூகத்திலும் இதுபோன்ற நிகழ்வை முன்னெடுப்பதற்கு எமக்கு பொறுப்பு சேர்க்கப்பட்டிருந்தது. இது போன்ற நிகழ்வுகளை நாம் நாடு முழுவதிலும் முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

கலாநிதி எஸ்.எச்.எம். ஃபராஸ் - பதில் பொது முகாமையாளர், நாமல் ஏக்கநாயக்க – மனித வளங்கள் மற்றும் அபிவிருத்தி முகாமையாளர், சிரேஷ்ட சந்தைப்படுத்தல் பணிப்பாளர் இஷான் கொடமான்ன மற்றும் பிராந்திய முகாமையாளர் - மொஹமட் ரஷீட் ஆகியோரும் ஃபஷன் பக் சார்பில் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

“சிசு திரிமக மையம் எனும் நிறுவனத்தின் பிரதான சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக நிறுவனம் அண்மையில் அதன் சொந்த புலமைப்பரிசில் நடவடிக்கைகளை அறிமுகம் செய்திருந்தது.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கான நேருக்கு நேர் ஆலோசனைகளை வழங்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்திருந்தது. இது நாட்டின் சகல மாவட்டங்களிலும் கல்வி அமைச்சுடன் இணைந்து 2016 முழுவதும் முன்னெடுக்கப்படும்” என கலாநிதி. எஸ்.எச்.எம். ஃபராஸ் - பதில் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

ஃபஷன் பக் வெவ்வேறு சமூக பொறுப்புணர்வு செய்திட்டங்களை நாடு முழுவதிலும் முன்னெடுப்பதில் பல மில்லியன் ரூபாக்களை செலவிட்டு வருகிறது. இதில் விளையாட்டு மற்றும் கல்வி முதல் சுகாதாரம், பொதுச் சேவைகள் போன்ற பல பிரிவுகள் அடங்கியுள்ளன. மிக அண்மையில் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த திட்டங்களில்ரூபவ் பின்தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கனிஷ்ட பாடசாலைக்கு கட்டிடம் ஒன்றை நிறுவி வழங்கியிருந்தது, அத்துடன் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்திருந்தது தபாலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளையும் புனருத்தாரணம் செய்திருந்தது.

ஃபஷன் பக் முன்னெடுக்கும் சமூகப் பொறுப்புணர்வு திட்டமான சிசு திரிமக ஊடாக 12000க்கும் அதிகமான மாணவர்கள் இதுவரையில் பயன்பெற்றுள்ளனர். 120 பாடசாலைகளின் 100ரூபவ்000 மாணவர்கள் எனும் இலக்கை எய்தும் வரையில் தொடர்ந்து இந்தத் திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1994ஆம் ஆண்டு தனது வியாபாரத்தை உத்தியோகபூர்வமாக 4 பங்காளர்களுடன் ஆரம்பித்திருந்த Fashion Bug, ஆரம்பத்தில் 15 ஊழியர்களை மட்டுமே கொண்டிருந்தது. இன்று 16 காட்சியறைகளைக் கொண்டுள்ளதுடன் இவற்றில் 1250க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் முன்னணி ஆடை அலங்கார விற்பனையகமாக திகழும் இந்த நிறுவனம் “வாழ்க்கைக்கு புது வடிவம்” எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58