ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். 

குமார வெல்கம, போக்குவரத்து அமைச்சராக இருந்த போது இலங்கை போக்குவரத்துச் சபையில் இல்லாத பதவியான பிரதித் தலைவர் பதவியை ஏற்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறி இலஞ்ச மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.