புதிய சட்டத்தை உருவாக்கி மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவோம் - தினேஷ் குணவர்த்தன 

Published By: Digital Desk 4

24 Nov, 2021 | 10:00 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் தற்போதுள்ள சட்டத்திற்கிணங்க மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. அதனால்  புதிய சட்டம் ஒன்றை உருவாக்கி மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

Articles Tagged Under: தினேஷ் குணவர்தன | Virakesari.lk

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின்போது  மாகாணசபை தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்  ரஞ்சித் மத்துமபண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கையில்,

மாகாணசபை தேர்தலுக்கு செல்ல அரசாங்கம் பயப்படுகின்றது. மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துவதாக தெரிவித்தே ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 2வருடமாகியும் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் எம்மை குறைகூறி வருகின்றது. மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு சபைக்கு சமர்ப்பித்தால் அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

அத்துடன் அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலையும் 2வருடங்களுக்கு பிற்போட நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் உண்மை நிலை என்ன என்பதை அரசாங்கம் அறிவிக்கவேண்டும் என்றார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இவ்வாறு பதிலளித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளித்து தெரிவிக்கையில்,

 நடைமுறை சட்டத்திற்கிணங்க மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மாகாணசபை தேர்தலை நடத்த புதிய சட்டம் இயற்றுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எமது முன்னாள் ஜனாதிபதியும் அது தொடர்பில் நீதிமன்றம் சென்றிருந்தார். அந்த வகையில் புதிய சட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு நாங்கள் இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளோம்.

அதற்கிணங்க  புதிய சட்டம் ஒன்றை உருவாக்கி மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம். உங்களது காலத்தில் நீங்கள் செய்த தவறை நாங்கள் நிவர்த்தி செய்வோம் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04