சமூகத்திற்கு தேவையான அனைத்து துறையிலும் வளர்சியடைய வேண்டும் - வியாழேந்திரன்

Published By: Digital Desk 3

24 Nov, 2021 | 02:53 PM
image

(எம்.நியூட்டன்)

எங்களுக்கு உரிமை கிடைத்தால் போதும் அதன் பின்னர் எல்லாம் கிடைக்கும் என சிலர் கூறுகின்றனர் அது எற்புடையது அல்ல ஒரு சமூகத்துக்கு தேவையான அத்தனை துறையிலும் வளர்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும் என  பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விதை பொதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை வரலாற்றிலே முன்வைக்கப்பட வரவு செலவுத்திட்டம் என்ற வகையிலே இம்முறையே  விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய பொருளாதார அபிவிருத்திக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 25 மாவட்டங்களில் உள்ள அத்தனை பிரதேச செயலகங்கள், கிராம சேவகர் பிரிவுக்கும் இந்த நிதி சமமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிதியை கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு வட கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கின்றது.

எங்களுக்கு உரிமை கிடைத்தால் போதும் அதன் பின்னர் எல்லாம் கிடைக்கும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் வளர்ச்சி என்பது எல்லா வகையிலும் நமக்கு கிடைக்க வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் தமிழரின்  இருப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கின்றது. திருகோணமலையில் ஒரு ஆசனம் தான் கிடைக்கின்றது இன்னும் சில வருடங்களில் அதுவும் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

பேசிக்கொண்டும் வெற்று அறிக்கை வெளியிடுவது மட்டும் அரசியல் அல்ல. ஒரு சமூகத்துக்கு தேவையான அத்தனை துறையிலும் வளர்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும். தூரநோக்குடன் திட்டங்களை வகுக்க வேண்டும். அடுத்த தலைமுறையாவது நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். 

போராட்ட அரசியலை நாம் கொச்சைப்படுத்த மாட்டோம். அது உயர்ந்த நோக்கில் இடம்பெற்றது.  அடுத்ததாக எதிர்ப்பு அரசியல்,நாங்கள் எதை செய்தாலும் எதிர்ப்போம் என்ற  அரசியல் காணப்படுகிறது. அதனால் எதையும் சாதிக்க முடியாது. 

முள்ளிவாய்க்கால் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் சரியான காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படவில்லை. நான் உட்பட 16 பேர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தோம். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. நீண்ட காலத் தீர்வு விடயங்களிலும் நாம் சாதிக்கவில்லை. அபிவிருத்தி விடயங்களையும் நாம் பெற்றுக் கொடுக்கவில்லை. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08