நாட்டின் பொருளாதார நெருக்கடியால் அரசியல் வெடிப்பு ஏற்படலாம் - ரணில் சபையில் எச்சரிக்கை

Published By: Digital Desk 4

23 Nov, 2021 | 09:17 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் அரசியல் வெடிப்பு ஏற்படலாம் அதனால் நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக சர்வதே நாணய நிதியத்துடன் கலந்துரையாடடி, அந்நிய செலாவணியின் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவேண்டும்.

அத்துடன் ஜனாதிபதி செயலணிகள் சட்டவிரோதமானவை, ஜனாதிபதியின் செலவின் கீழ் அந்த செயலணிகளுக்கு ஒரு சதமேனும் செலவிடமுடியாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(23) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவினத்தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஆணைக்குழு அறிக்கையின் ஒருபகுதி தான் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. எஞ்சிய பகுதியை சமர்ப்பிக்க வேண்டும். 

இந்த நிலையிலே இது தொடர்பில் பல்வேறு எதிர்ப்புகள் முன்வைக்கப்படுகிறன. பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகிறன. இந்த ஆணைக்குழு நியமிக்க முன்னர் எமது ஆட்சியில் தெரிவிக்குழு நியமிக்கப்பட்டது.

ஆனால் அறிக்கையை நம்ப முடியாது என்கின்றனர். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் 23 பகுதிகள் வரை  உள்ளன. சட்டத்தரணிகளுக்கு  அவற்றை பார்க்க முடியுமானால் ஏன் கட்சித் தலைவர்களுக்கு பார்க்க முடியாது.

அதேபோன்று யுகதனவிய ஒப்பந்தம்  தொடர்பான அறிக்கையில் என்ன உள்ளது என்று தெரிந்து கொள்ள சபைக்கு உரிமை உள்ளது. அமைச்சர்களுக்கு பொறுப்பு கூறாத குழு இருக்கின்றது.

சகலரும் பாராளுமன்றத்திற்கு பொறுப்பு உள்ளது. பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்  நியமிக்கப்பட்டுள்ளன. எத்தனை ஆணைக்குழுக்களையும் நியமிக்கலாம். ஆனால் அமைச்சரவையில் ஆராயாது இவை நியமிக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்துக்கு  பொறுப்புக் கூறாத அவற்றுக்கு நிதி ஒதுக்க முடியாது.  அது சட்டவிரோமானது. இந்த செயலணிகளுக்கு ஜனாதிபதியின் செலவுகளுக்கு கீழ் ஒரு சதமேனும் செலவிடமுடியாது. அவ்வாறு செலவு செய்யும் அதிகாரிகாரிக்கு எதிராக தண்டனை வழங்கமுடியும்.

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி இருக்கின்றது. இதுதொடர்பில் பாராளுமன்றத்தில் பலருக்கும் கருத்துக்கள் இருக்கலாம். பொருளாதாரத்தை 3 பேரின் நிலைப்பாட்டில்  கொண்டுசெல்வதா?. நாட்டின் பொருளாதாரத்தை இல்லாமலாக்க 3பேருக்கு வழங்குவதா? பொருளாதாரத்தை நிர்வகிக்க அமைச்சரவைக்கு பொறுப்பளியுங்கள்.

அமைச்சரவை சட்டவிரோதமாக செயற்பட்டால் அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரமுடியும். மத்திய வங்கி ஆளுநரும் அமைச்சரவைக்கு மேல் சென்றிருக்கின்றார். அமைச்சரவைக்கு தெரியாமல் எவ்வாறு தீர்மானம் எடுக்க முடியும்?

அத்துடன் நாங்கள் அனைவரும் சர்வதேச நாணய நிதியத்தின் அங்கத்தவர்கள். அதனால் எமது பொருளாதார நெருக்கடி தொடர்பாக கலந்துரையாட அங்கு செல்லவேண்டியதில்லை. சென்றுதான் இருக்கின்றோம். பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்த முறையான அந்நிய செலாவணியை ஏற்படுத்திக்கொள்ளவே சர்வதேச நாணய நிதியத்துடன் இனங்கி இருக்கின்றோம்.

அதுதொடர்பாக கருத்து பரிமாறிக்கொள்ளவேண்டும். எமது அந்நிய செலாவணியை நிர்வகிப்பது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் கருத்து பரிமாறிக்கொள்ளவேண்டும்.

இது இடம்பெற்றதா என்பதையும் அவ்வாறு இடம்பெற்ற பொருளாதார கருத்து அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அதுதாெடர்பில் விவாதித்து, அந்த இடத்தில் இருந்து முன்னுக்கு செல்ல முடியுமா என பார்ப்போம்.

ஏனெனில் நாட்டின்  பொருளாதார நெருக்கடியினால் அரசியல் வெடிப்பு ஏற்படலாம். அதனால் நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அந்நிய செலாவணியை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் அந்நிய செலாவணியை நிர்வகிக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன என்பதை சபைக்கு நிதி அமைச்சர் அறிவிக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58