கிளிநொச்சி தட்டுவன்கொட்டி பிரதான வீதியை விரைவாக புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

Published By: Gayathri

23 Nov, 2021 | 02:52 PM
image

கிளிநொச்சி தட்டுவன்கொட்டி கிராமத்துக்கான பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் முன்னெடுப்பதற்கான ஒப்பந்த காலம் நிறைவடைந்து ஒருவருடம் கடந்த நிலையிலும் புனரமைப்பு பணிகள் உரிய காலத்தில் முன்னெடுக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் தற்போதைய பருவ மழையினால் குறித்த கிராமத்துக்கான போக்குவரத்துக்களில்  பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதாகவும் அப் பிரதேச மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தட்டுவன்கொட்டி கிராமத்தில் 95 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது வாழ்ந்து வருகின்றன.

இந்தநிலையில் கடலாலும் சதுப்பு நிலங்களாலும் சுழப்பட்ட குறித்த கிராமத்திற்கான ஒரே ஒரு போக்குவரத்து வீதியாக ஆணையிறவு தட்டுவன்கொட்டி வீதி காணப்படுகின்றது. 

குறித்த வீதி புனரமைப்புக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளபோதும் அதன் புனரமைப்புப் பணிகள் மந்தகதியில் மேற்கொள்ளப்படுகின்றன.

அதாவது கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒப்பந்த வேலைகள் நிறைவேற்றப்படவேண்டும். ஆயினும் இந்த வீதி புனரமைக்கப்படாத நிலையில் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி  கிராமத்திலிருந்து 25 க்கும் மேற்பட்டோர் ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வதாகவும், 20 வரையான மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் நிலையிலும்  பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த வீதியை புனரமைப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22