காஷ்மீர் மனித உரிமை ஆர்வலர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

Published By: Vishnu

23 Nov, 2021 | 02:05 PM
image

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேஸ் என்பவரை இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

Kashmiri Rights Activist Khurram Parvez Arrested In Terror Funding Case

காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலதில் திங்கட்கிழமை அதிகாலை  இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போதே  குர்ரம் பர்வேஸ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் பொலிஸ் படை (CRPF) பணியாளர்களின் உதவியுடன் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆர்வலர் பர்வேஸ் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குர்ரம் பர்வேஸ் மீது 2016 ஆம் ஆண்டு பொது பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் பங்கேற்க சுவிட்சர்லாந்து செல்ல தடை விதிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து அவர் கைது செய்யப்பட்டார். 76 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

பர்வேஸ், தன்னிச்சையாக காணாமல் போனவர்களுக்கு எதிரான ஆசிய கூட்டமைப்பின் (AFAD) தலைவராகவும், ஜம்மு காஷ்மீர் சிவில் சமூகத்தின் (JKCCS) திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். 

2004 பாராளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்கும் போது கண்ணிவெடியில் சிக்கி தனது காலினை இழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52