தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பெயரை மாற்றியமைக்க அமைச்சரவைப்பத்திரம் மோசடி குறித்து ஆரா­யப்­படும் என்­கிறார் திகாம்­பரம்

Published By: Robert

19 Dec, 2015 | 09:29 AM
image

தொண்­டமான் ஞாப­கார்த்த மன்­றத்தின் பெயரை மாற்­றி­ய­மைப்­பது தொடர்­பிலும் அந்­நி­று­வ­னத்தை மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்சின் கீழ் கொண்­டு­ வ­ரு­வதை வலி­யு­றுத்­தியும் அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஒன்றைத் சமர்ப்­பித்­தி­ருப்­ப­தாக அமைச்சர் பழனி திகாம்­பரம் நேற்று சபையில் தெரி­வித்தார்.

இம்­மன்­றத்தில் இடம்­பெற்­றுள்ள பாரிய நிதி மோசடி தொடர்பில் ஆய்வு செய்யும் பொருட்டு கணக்­காய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள போதிலும் அதன் அதி­கா­ரிகள் ஒத்­து­ழைப்­பினை நல்­கு­வதில் பின்­ன­டித்து வரு­கின்­றனர். எனினும் கணக்­காய்வு அறி க்கை கிடைத்­ததும் தொண்­டமான் ஞாப­கார்த்த மன்றம் தொடர்பில் அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என்றும் அவர் கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற வரவு – செலவுத் திட்­டத்தின் 8 அமைச்­சுக்­க­ளுக்­கான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய ஜே.வி.பி.யின் விஜித்த ஹேரத் எம்.பி.யின் கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் திகாம்­பரம் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பளப் பிரச்­சினை, காணி, வீட்டு உரிமை, அடிப்­படை சுகா­தார வசதி மற்றும் தொண்­டமான் ஞாப­கார்த்த மன்றம் ஆகியன தொடர்பில் பல்­வேறு கேள்­வி­களை விஜித்த ஹேரத் தொடுத்தார்.

ஒரு சந்­தர்ப்­பத்தில் தொண்­டமான் ஞாப­கார்த்த மன்­றத்தில் நிதி மோசடி இடம்­பெற்­றி­ருப்­ப­தாகக் குறிப்­பிட்ட விஜித்த ஹேரத் எம்.பி. தொண்­டமான் ஞாப­கார்த்த மன்­றத்தை “திகாம்­பரம் மன்­ற­மாக” மாற்­றி­ய­மைக்கத் திட்டம் இருக்­கி­றதா என்று கேள்வி எழுப்­பினார்.

இதன் போது அமைச்சர் திகாம்­பரம் இங்கு மேலும் கூறு­கையில்,

தொண்­டமான் ஞாப­கார்த்த மன்­றத்தில் பாரிய நிதி மோசடி இடம்­பெற்­றுள்­ளது. தனி­நபர் ஒரு­வரின் பெயரில் இயங்கும் இந்­நி­று­வ­னத்­திற்கு 200 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு இடம்­பெற்­றுள்­ளது. இது மக்­க­ளுக்கு சொந்­த­மான பண­மாகும். எனவே இதில் மோசடி இடம்­பெற்­றதை ஏற்க முடி­யாது.

இங்கு இடம்­பெற்­றுள்ள மோச­டி­களை ஆரா­யு­மாறு கணக்­காய்­வுப்­பி­ரி­வுக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் அங்­குள்ள அதி­கா­ரிகள் இவ்­வி­ட­யத்தில் ஒத்­து­ழைப்­பு­களைத் தரு­வ­தாக இல்லை. எப்­ப­டி­யி­ருப்­பினும் கணக்­காய்வு அறிக்கை கிடைக்கப் பெற்­றதும் அடுத்த கட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும்.

மேலும் தொண்­டமான் ஞாப­கார்த்த மன்­றத்தின் பெயரை மாற்­றி­ய­மைத்தல் மற்றும் அதனை எனது அமைச்சின் கீழ் கொண்டு வருதல் ஆகி­யவை தொடர்பில் அமைச்­ச­ர­வைக்கு பத்­திரம் ஒன்றை சமர்ப்­பித்­துள்ளேன்.

அத்­துடன் நாம் 1000 ரூபாவைப் பெற்றுத் தருவோம் என்று ஒரு போதும் கூற­வில்லை. 1500 ரூபாவை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்குப் பெற்றுக் கொடுத்­தாலும் நாம் மகி­ழ்ச்­சி­ய­டைவோம். ஆனால் முன்னாள் அமைச்சர் ஆறு­முகன் தொண்­ட­மானே தேர்தல் வெற்­றியை இலக்­காக வைத்து 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவதாக கூறினார். அத்துடன் இப்போதைய அரசாங்கம்தான் தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்புக்கென 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38