வடக்கு கிழக்கு உட்பட அனைத்து கிராமசேவகர் பிரிவுகளுக்கும் ஒரே அளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது - பசில் ராஜபக்

Published By: Digital Desk 3

23 Nov, 2021 | 11:37 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

முழுநாட்டையும் ஒன்றாக கருதி வடக்கு கிழக்கு உட்பட  அனைத்து கிராமசேவகர் பிரிவுகளுக்கும் உள்ளூராட்சி பிரிவுகளுக்கும்   கட்சி, இன மத குல பேதமின்றி ஒரே அளவான நிதி வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய நிதியை அரசுடமையாக்கியதை போன்று, வேறு ஏதேனும் மோசடியுடன் தொடர்புடைய நிதி இருக்குமாக இருந்தால் அதனையும் அரசுடமையாக்க பின்வாங்க மாட்டேன் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2022 ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்க்கையில்,

நாட்டில் எமக்குள்ள சவால்களை நான் முன்வைத்தேன். அதனை தான் எதிரணியும் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் தெரிவித்தது. ஆளும்,  எதிர்த்தரப்பு முன்வைத்த சகல யோசனைகளும் அமைச்சரவைக்கு  சமர்ப்பித்து தேவையான முடிவுகளை எடுப்போம்.

அரச சேவை சம்பள முரண்பாட்டை தீர்க்க  புதிய சம்பள முறையொன்றை தயாரிக்க இருக்கிறோம். சம்பள நிர்ணய ஆணைக்குழுவுக்கு யோசனை முன்வைத்து தேவையான மாற்றம் செய்வோம். சுகாதார சேவை சம்பள முரண்பாடு தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டு செலாவணி பிரச்சினைக்கு தீர்வு யோசனை எதுவும் எதிர்த்தரப்பால் முன்வைக்கப்படவில்லை.  அந்நியச் செலாவணி, வெளிநாட்டு முதலீடு  தேவையற்ற சட்டங்களை இலகுபடுத்த  இருக்கிறோம். இதற்காக ஜனாதிபதி, செயலணி ஒன்றை நியமிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

அத்துடன் கொவிட் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட  தரப்பினர் குறித்து வரவு செலவு திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இதில் உள்ளடங்காத சகல தரப்பினருக்கும் நிவாரணம் வழங்க பின்நிற்க மாட்டோம்.  தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை  நாம் கிராமத்திற்கு   வழங்கியுள்ளோம்.

மேலும் வடக்கு கிழக்கு பிரதேச எம்.பிகள் தமது பிரதேசங்களுக்கு  விசேட திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை    என்று  தெரிவித்தனர். முழுநாட்டையும் ஒன்றாக கருதி வடக்கு கிழக்கு உட்பட  14,021 கிராமசேவகர் பிரிவுகளுக்கும் 4,917 உள்ளூராட்சி பிரிவுகளுக்கும்   கட்சி,இன மத குல பேதமின்றி ஒரே அளவான நிதி வழங்கப்பட்டுள்ளது. 

பின்தங்கிய வடக்கு பிரதேசங்களுக்கு விசேட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுத்ததாலே அப்பகுதிகளை ஏனைய பகுதிகளுக்கு சமமாக அபிவிருத்தி செய்துள்ளோம்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் வடக்கு கிழக்கு அபிவிருத்தி செய்யப்பட்டன. வவுனியாவுக்கு அப்பால்  மின்சாரம் இருக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்தில் 24 மணிநேரமும் மின்சாரம் வடக்கிற்கு வழங்கப்பட்டது. அவர்கள் எங்களுடன் இருக்கின்றார்களா இல்லையா என்று பார்ப்பதில்லை. அனைவரையும் ஒன்றாகவே பார்க்கின்றோம்.

அத்துடன் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய நிதியை அரசுடமையாக்கியதை போன்று, வேறு ஏதேனும் மோசடியுடன் தொடர்புடைய நிதி இருக்குமாக இருந்தால் அதனையும் அரசுடமையாக்க பின்வாங்க மாட்டேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19