மேல் மாகாணத்தில் இன்று முதல் பொலிஸாரின் விசேட நடவடிக்கைகள்

Published By: Vishnu

23 Nov, 2021 | 08:27 AM
image

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் 382 பயணிகள் பஸ்கள் மற்றும் 89 குளிரூட்டப்பட்ட பஸ்களின் சாரதிகளுக்கு பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் 573 வர்த்தக நிலைய நடத்துனர்களும் எச்சரிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் வசிப்பவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்களா என்பதை ஆராய்வதற்காக, நேற்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அங்கு விசேட பொலிஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

435 பொலிஸ் அதிகாரிகள் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன்போது 987 பயணிகள் பஸ்கள், 223 குளிரூட்டப்பட்ட பஸ்கள், 1,336 சில்லறை விற்பனை நிலையங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதேவேளை கொவிட்-19 தொற்றுநோய்க்கு முகங்கொடுக்கும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் பயணிப்பவர்கள் - பொது சேவை சாரதிகள் மற்றும் ஊழியர்கள் - வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் உட்பட பொது மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43