(எஸ்.சதீஸ்)

கொட்டகலை மற்றும் கினிகத்தேன பகுதியில்  2013 ஆம் ஆண்டு மத்திய மாகாணசபை தேர்தலின் போது செந்தில் தொண்டமான் உள்ளிட்ட இ.தொ.கா. குழுவினருக்கும் அமைச்சர் பி.திகாம்பரம் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் இடம் பெற்ற இருவேறு மோதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் ஒத்திவைத்தார்.

கினிகத்தேன பொலிஸாரும் ஹட்டன் பொலிஸாரும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இன்று விசாரணைக்கு எடுத்து கொண்டபோதே ஹட்டன் மாவட்ட பதில் நிதவான் எஸ்.கருனாகரன் இவ்வாறு உத்தரவிட்டார்.

அமைச்சர் பழனி திகாம்பரம் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் மத்திய மாகாண விவசாய அமைச்சர் எம்.ராமேஸ்வரன் மாகாணசபை உறுப்பினர்களான உதயகுமார்,சக்திவேல்,எம்.ராமசாமி, முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்.பி.இராஜதுறை, உள்ளிட்ட பலர் நீதிமன்றத்திற்கு ஆஜராகியிருந்தனர்.