தீர்வு இல்லையேல் போராட்டத்தில் குதிப்போம் - இலங்கை அரசாங்க உத்தியோகபூர்வ தொழிற்சங்க கூட்டமைப்பு

Published By: Digital Desk 4

21 Nov, 2021 | 09:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரையில் சாதகமாக தீர்மானம் கிடைக்கப் பெறவில்லை.

எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழங்காவிடின் 29ஆம் திகதி முதல் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படவோம் என இலங்கை அரசாங்க உத்தியோகப்பூர்வ தொழிற்சங்க கூட்டமைப்பின்உறுப்பினர் பி.எச் பி.பஸ்நாயக்க தெரிவித்தார்.

Page 1449 – Helanews.lk

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2022ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பள அதிகரிப்பு அல்லது 16000ஆயிரம் ரூபா மாத கொடுப்பனவு வழங்கலை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடந்த 13 ஆம் திகதி கடிதம் அனுப்பி வைத்தோம். தொழிற்சங்கத்தினரது கோரிக்கைக்கு ஜனாதிபதி இதுவரையில் பதிலளிக்கவில்லை.

;.கொவிட் தாக்கத்தினாலும்,வாழ்க்கை செலுகள் அதிகரிப்பினாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரவு-செலவு திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதை பொருத்தமற்ற செயற்பாடு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படாவிடின் இரண்டு வாரத்திற்கு பின்னர் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடு;ப்படுவதாக குறிப்பிட்டோம்.8 பிரதான அரச துறைகளில் உள்ள தொழிற்சங்கத்தினரை ஒன்றினைத்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம்.

60 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று அவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் 29ஆம் திகதி முதல் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படுவோம்.

2022ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் ஓய்வுப் பெறும் வயது 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது அத்துடன் அரச ஊழியர்களின தொழில் உரிமை நீக்கப்பட்டு பேச்சுசுதந்திரத்தை முடக்கும் வகையில் அரச நிர்வாக அமைச்சி;ன செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை இரத்து செய்யப்பட வேண்டும்.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01