ரஞ்சன் மடுகல்லவின் 200 ஆவது டெஸ்ட் போட்டி 

Published By: Digital Desk 2

21 Nov, 2021 | 12:35 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றுவதன் மூலமாக டெஸ்ட் அரங்கில் 200 போட்டிகளில் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றிய முதல் போட்டி மத்தியஸ்தர் என்ற சாதனையை படைத்தார் இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னான் வீரரும் தற்போது ஐ.சி.சி. யின் பிரதான போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றும் ரஞ்சன் மடுகல்ல,  1993 ஆம் ஆண்டு போட்டி மத்தியஸ்தரர் ‍பொறுப்பை ஏற்றார். 

அது முதல் இதுவரை காலமும் சிறந்த போட்டி மத்தியஸ்தராக அவர் கடமையாற்றி வருகிறார். இவரே ஐ.சி.சியின் முதலாவதும் ஒரேயொரு பிரதான போட்டி மத்தியஸ்தராகவுள்ளமை இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும். 

1982 முதல் 1988 வரையான 6 ஆறு ஆண்டு காலப்பகுதிகள் இலங்கைக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளதுடன், 2 போட்டிகளுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். 

தனது 29 ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றிருப்பினும், தனது 62 வயதிலும் தொடர்ந்தும் கிரிக்கெட்டுக்காக பணியாற்றி வருகின்றமை விசேட அம்சமாகும்.

இலங்கை  -  மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியானது போட்டி மத்தியஸ்தராக களம் காணும் இவரின் 200 ஆவது டெஸ்ட் போட்டி என்பதுடன்,  இதுவரை 369 சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கும், 125 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கு போட்டி மத்தியஸ்தராக செயற்பட்டுள்ளார். 

No description available.

மேலும், மகளிர் சர்வதேச ஒருநாள் அரங்கில் 14 போட்டிகளுக்கும், மகளிர் சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் 8 போட்டிகளுக்கும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுவரும் நூற்றுக்கும் மேற்பட்ட இருபதுக்கு 20 லீக் போட்டிகளுக்கும் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35