நீரில் தவறி விழுந்த 3 வயது 9 மாத குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று இன்று நண்பகல் மின்னேரியாவில் நிகழ்ந்துள்ளது. 

நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்துக்குள் தவறி விழுந்த நிலையில் நீரில் மூழ்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

பெற்றோர் குழந்தையை மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், அக்குழந்தைக்கு ஏற்கெனவே உயிர் பிரிந்து விட்டிருந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. 

உயிரிழந்த குழந்தையின் சடலம் மின்னேரியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.