நவம்பரில் இதுவரை 19,222 சுற்றுலா பயணிகள் வருகை - பிரசன்ன ரணதுங்க

Published By: Digital Desk 3

20 Nov, 2021 | 10:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சுற்றுலா பயணிகளுக்காக நாடு கடந்த ஜனவரி மாதம் முழுமையாக திறக்கப்பட்டது. அன்றிலிருந்து இம்மாதம் வரை நாட்டுக்கு சுமார் 80 ஆயிரத்து 310 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதுடன் இம்மாதத்தின் முதலிரு வாரங்களில் மாத்திரம்  19,222 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு தீர்வு காண வேண்டுமாயின் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் முன்னேற்றமடைய வேண்டும். சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு முறையான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடன் வசதிகள், நிவாரன பொதி வழங்கள் உள்ளிட்ட திட்டங்கள் தற்போதும் செயற்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

சுற்றுலா பயணிகளுக்காக நாடு கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய  சுறறுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைக்கும் திட்டங்கள் முறையாக செயற்படுத்தப்பட்டன.

நிறைவடைந்த 10 மாத காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 80 ஆயிரத்து 310 சுற்றுலா வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இம்மாதத்தில் இரு வாரங்களில் மாத்திரம் 19 ஆயிரத்து 222 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியா,ஐக்கியஇராச்சியம்,ரஷ்யா,பாக்கிஸ்தான்,ஜேர்மனி,மாலைத்தீவு,பிரான்ஸ்,கடனா,அமெரி;க்கா மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆயிரத்து 547 சுற்றுலா பயணிகளும், ஒக்டோபர் மாதம் 22 ஆயிரத்து 771 பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் திட்டங்களை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது தினசரி 5 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவது பிரதான இலக்காகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43