கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 வீதத்தால் அதிகரிப்பு -  இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம்

Published By: Digital Desk 2

20 Nov, 2021 | 10:27 PM
image

எம்.மனோசித்ரா

நாட்டில் ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தின் பின்னர் நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் , மதவழிபாடுகள் உள்ளிட்ட உற்சவங்கள் மற்றும் மரண சடங்குகள் என்பவற்றில் அளவுக்கதிகமான மக்கள் ஒன்று கூடியமை மற்றும் இது போன்ற சந்தர்ப்பங்களில் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாமை என்பவையே இதற்கான காரணமாகும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் முன்னெடுக்கப்பட்ட எழுமாற்று கொவிட் பரிசோதனைகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன. முன்னரைப் போன்று பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட்டால் தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் உபுல் ரோஹண சுட்டிக்காட்டினார்.

நாட்டில் தற்போது மீண்டும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ள நிலையில் , அது தொடர்பில் விளக்கமளிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறிப்பிடுகையில் ,

உற்சவங்கள் உள்ளிட்டவற்றில் அதிகளவான மக்கள் ஒரே சந்தர்ப்பத்தில் ஒன்று கூடுவது கொவிட் பரவலை இலகுவாக்கும். இதன் காரணமாக முன்னரைப் போன்று கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தால் , கீழ் மட்டத்தில் சேவையாற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

கொவிட் கட்டுப்படுத்தலுக்கான விதிமுறைகளை பிறப்பிக்கக் கூடிய உயர் அதிகாரி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆவார். அவரால் வெளியிடப்படும் சுற்று நிரூபங்களே இறுதியானவை.

இவற்றை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் பொது போக்குவரத்துக்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை அவற்றின் பின்னால் சென்று அவதானித்துக் கொண்டிருக்க முடியாது. எனவே சாரதிகள், நடத்துனர் மற்றும் பயணிகள் என அனைத்து தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

கிராமங்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததே தவிர , முற்றாக ஒழியவில்லை. இவ்வாறு தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைந்த பின்னர் சுகாதார விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமையின் காரணமாகவே மீண்டும் சிறு சிறு கொத்தணிகள் உருவாகத் தொடங்கியுள்ளன. 

கடந்த சில மாதங்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமையின் காரணமாகவே தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் மீண்டும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. காரணம் நாட்டின் பொருளாதார நிலைமையேயாகும்.

தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளோம் என்பதற்காகவும் கவனயீனமாக செயற்பட முடியாது. காரணம் சைனோபார்ம் தடுப்பூசினால் கிடைக்கப் பெறும் பாதுகாப்பு சில மாதங்களின் பின்னர் குறைவடையத் தொடங்கும் என்று சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசியின் மூலம் மரணங்களின் எண்ணிக்கையை மாத்திரமே குறைக்க முடியும். மேற்கூறப்பட்டவாறு நோய் எதிர்ப்பு சக்தி குறைவடையுமாயின் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். குறைக்கப்பட்டுள்ள ஏழுமாற்று பரிசோதனைகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்படுமாயின் தொற்றாளர் இனங்காணப்படும் வீதமும் அதிகரிக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18