திமுத்து தலைமையிலான இலங்கை கிரிக்கெட் குழாமில் புதுமுக வீரர்கள் சிலர் இடம்பிடிப்பு

20 Nov, 2021 | 03:08 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை  மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதிக்கொள்ளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 22 வீரர்கள் அடங்கிய இலங்கை கிரிக்கெட் குழாம் விபரம்  வெளியிடப்பட்டுள்ளது.  

திமுத் கருணாரட்ண தலைமையிலான இலங்கை கிரிக்கெட் குழாமில் புதுமுக வீரர்கள் சிலருக்கு இடம் கிடைத்துள்ளதுடன், சிரேஷ்ட வீரர்கள் சிலருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Image

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துடனான வருடாந்த சம்பள ஒப்பந்தத்தில் பிரச்சினையால் அணிக்குள் திரும்பாமல் இருந்த முன்னாள் அணித்தலைவரான எஞ்சலோ மெத்தியூஸ் மீண்டும்  அணிக்கு திரும்பியுள்ளமை இலங்கை அணிக்கு பெரும் பலமாகும். 

அவரின் அனுபவம்  இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறந்த பயனாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.  

Image

அவரைத் தவிர, முன்வரிசை துடுப்பாட்ட வீரரான ஓஷத பெர்னாண்டோ,  வேகப்பந்துவீச்சாளரான சுரங்க லக்மால், அவ்வப்போது மாத்திரம் இலங்கை அணிக்குள் வாய்ப்பு வழங்கப்பட்டுவரும் ரொஷேன்  சில்வாவும் இந்த குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

இவர்களுடன் மற்றுமொரு முன்னாள் அணித்தலைவரான தினேஷ் சந்திமால் அணியில் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

அண்மைக்காலமாக இலங்கை அணியின் நம்பிக்கைக்குரிய வீரராக வலம் வரும் சரித் அசலங்க, கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். 

இவருடன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் கமில் மிஷார, கழக மட்டங்களில் சகல துறை வீரர்களாக ஜொலித்த சுமிந்த லக்சான், சாமிக்க கருணாரட்ண ஆகிய புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிய நாளைய தினம் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் குழாம் விபரம்

திமுத் கருணாரட்ண (அணித்தலைவர்), ஓஷத பெர்னாண்டோ, எஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, பெத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, மினோத் பானுக்க,  ரொஷேன் சில்வா, கமில் மிஷார, ரமேஷ் மெண்டிஸ், காமிக்க கருணாரட்ண, லக்சான் சந்தகேன், லசித் எம்புல்தெனிய, பிரவீன் ஜயவிக்ரம, சுமிந்த லக்சான், சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ,துஷ்மன்த்த சமீர, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ,சாமிக்க குணசேகர.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35