இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை

Published By: Vishnu

19 Nov, 2021 | 08:28 AM
image

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலியில் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர் ஷேன் மெக்டெர்மொட் கொவிட்-19 க்கு நேர்மறை சோதனை செய்துள்ளார்.

அவர் இப்போது அணி உறுப்பினர்களிடமிருந்து விலகி, சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்.

இலங்கை அணியின் அனைத்து வீரர்கள் மற்றும் ஊழியர்களிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளிலேயே மெக்டெர்மொட் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந் நிலையில அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவர் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பயிற்சியாளர்கள் தேசிய அணியுடன் காலியில் அண்மைய நாட்களில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதும் எந்த ஒரு வீரர்களும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவில்லை என்று இலங்கை கிரிக்கெட்டின் மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கூறினார்.

இலங்கையின் அனைத்து வீரர்களும், பயிற்சியாளும், ஊழியர்களும் கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளதனால் முதல் டெஸ்ட் போட்டியின் துவக்கம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21