முல்லைத்தீவில் கார்த்திகைத் தீபத்தால் குழப்பமடைந்த இராணுவம் : சுடர் ஏற்றியவர்களிடம் விசாரணை 

Published By: Digital Desk 4

18 Nov, 2021 | 10:25 PM
image

கே .குமணன்

இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் கார்த்திகை தீபத் திருநாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இந்த திருநாளை தீபம் ஏற்றி  கொண்டாடிய வேளை, மாவட்டத்தின்  சில இடங்களில்  இராணுவத்தினர் இந்த கார்த்திகை தீபத்திருநாளை குழப்பும் வகையில் செயற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.

மாவீரர் நாள் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் நாள் நினைவேந்தப்படும் நிலையில் நேற்றைய நாளிலிருந்தே (17) முல்லைத்தீவு மாவட்டத்தின் 07 பொலிஸ் பிரிவுகளினூடாக 47 பேருக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நினைவேந்தலுக்கு எதிராக தடையுத்தரவு பெறப்பட்டு வழங்கப்பட்டிருந்தத்தது.

இந்த நிலையில் செல்வம் பெருக துன்பம் அகல வாழ்வு சிறக்க வேண்டி இந்துக்கள் வீடுகளின் முன்பாகவும் , தமது தொழில் நிலையங்கள், தோட்ட நிலங்கள் போன்றவற்றில் தீபம் ஏற்றி  கார்த்திகைத்தீபத்திருநாளை அனுஷ்டிப்பது வழமை.

வழக்கம் போன்றே இன்று இரவு 06 மணிமுதல் முல்லைத்தீவு மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில் மக்கள் இவ்வாறு வாழைக்குற்றிகளை  வீட்டின் முன்பாக நாட்டி அதில் சுடர் ஏற்றி கார்த்திகை திருநாளை  கொண்டாடிய நிலையில் குழப்பமடைந்த இராணுவத்தினர் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் தீபம் ஏற்றிய சில வீடுகளுக்கு சென்று   விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை மாதத்தில் தங்களது பண்டிகைகளைக் கூட சுதந்தரமாக கொண்டாட முடியாத நிலையில் அச்சத்துடன் வாழவேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01