அமைச்சுக்கள் சிலவற்றின் நிறுவனங்கள், சட்ட கட்டமைப்பில் திடீர் திருத்தம்

Published By: Digital Desk 4

18 Nov, 2021 | 09:26 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அமைச்சுக்கள் சிலவற்றின் நிறுவனங்கள் மற்றும் சட்ட கட்டமைப்பு திருத்தம் செய்யப்பட்டு அதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தேசிய முன்னுரிமை செயற்திட்டத்தின் கீழ் நிறுவன மற்றும் கட்ட கட்டமைப்பில் ஜனாதிபதி செயலகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பதிவு ; ஜனாதிபதி செயலகம் சென்ற தெரிவுக்குழு |  Virakesari.lk

அதற்கமைய பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதியமைச்சு, வெளிவிவகாரத்துறை அமைச்சு, திறன் மேம்பாடு தொழில்கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சு ஆகிய அமைச்சுக்களின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பு ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரசியலமைப்பின் முறையே 44(1),45(1) மற்றும் 47(1) (அ),(ஆ) ஆகிய உறுப்புரைகளுக்கமைய,2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி 2187.27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தலானது காலத்திற்கு காலம் திருத்தம் செய்யபட்டு நேற்று முன்தினம்(17)ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

'ஜனாதிபதி அலுவலகம்-தேசிய நிகழ்ச்சி முன்னுரிமை நிகழ்ச்சித்திட்டம்' எனும் தலைப்பில் இலங்கை முதலீட்டுச் சபை,கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்கு,முப்படை உறுப்பினர்களை கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக அனைத்து படைகளினால் எடுக்க வேண்டிய செயன்முறைகளை கற்றாராய்ந்து சொல்லப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்குவதற்கான ஜனாதிபதி செயலணி,பாதுகாக்கான நாடு,ஒழுக்கப் பண்புமிக்க ,குணநெறிமிக்க சட்டத்தை மதிக்கும் சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி,கொவிட் -19 அமைச்சுக்களின் செயலணி,

மற்றும் கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமையை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணி,இலங்கை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி,பொருளாதார புத்தெழுச்சி ஜனாதிபதி செயலணி,காலநிலை மாற்றம்-பசுமையான இலங்கை தொடர்பான ஜனாதிபதி செயலணி,சிறு பொருளாதார வாழ்வாதார ஜனாதிபதி செயலணி,கொவிட்-19 தடுப்பூசி செலுத்தல் தேசிய செயற்திட்ட ஜனாதிபதி செயலணி,பசுமை விவசாயம் ஜனாதிபதி செயலணி,ஒரேநாடு-ஒரே சட்டம தொடர்பான ஜனாதிபதி செயலணி ஆகியவற்றிற்கு  1978 ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழு சட்டம்(முதலீட்டுச்சபை சட்டம்), 2021ஆம் ஆண்டு 11ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள பதிவாளர் நாயகத் திணைக்களம்,குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம்,அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய மன்றம் ,அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்,தேசிய அனர்த்த நிவாரணச் சேவைகள் நிலையம்,வளிமண்டலவியல் திணைக்களம்,ரக்னா ஆரக்சன லங்கா கம்பனி,இரசாயன ஆயுதங்கள் சமவாயத்தை செயற்படுத்தும் தேசிய அதிகார சபை,அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை,பாதுகாப்பு சேவை கல்லூரி,

மற்றும் தேசிய பாதுகாப்பு நிதியம்,பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்,,தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம்,இலங்கை தேசியப் பாதுகாப்புக் கல்லூரி,ரணவிரு சேவை அதிகார சபை,அப்பிவெனுவென் அபி நிதியம் ஆகிய நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

நிதியமைச்சிற்கு உரிய தாபனம் மற்றும் சட்டரீதிச் சட்டகத்தில் பொதுத் திறைசேரி நடவடிக்கைகள்,அரச வருமான முகாமைத்துவ நடவடிக்கைகள்,வங்கி நிதிகள் மற்றும் மூலதனச்சந்தை கொள்கைகள் மற்றும் ஒழுங்குருத்துறை அலுவல்கள்,நிதிய முகாமைத்துவம்,ஒழித்துக்கட்டுவதற்கு அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டங்களும்,சட்ட விதிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

 வெளிவிவகாரத்துறை அமைச்சுக்கு உரிய தாபனம் மற்றும் சட்டசட்டரீதிச் சட்டகத்தில்  வெளிநாடுகளில் உள்ள தூதராண்மைக் குழுக்கள்,தேசிய கடல்சார் நடவடிக்கைச் செயற்குழு செயலகம்,அரச சார்பற்ற அமைப்புகளுக்கான செயலகம், ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டங்களும்,சட்ட விதிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

வெகுசன ஊடக அமைச்சுக்குரிய தாபன மற்றும் சட்டரீதிச் சட்டகத்தில் தகவல் அறியும் உரிமை பற்றிய ஆணைக்குழு,அரச அச்சகத் திணைக்களம்,அரச தகவல் திணைக்களம்,இலங்கை பத்திரிகை சபை,இலங்கை ஒளிப்பரப்பு கூட்டுத்தாபனம்,சுயாதீன தொலைக்காட்சி ஊடாக வலையமைப்பு,இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்,வரையறுக்கப்பட்ட இலங்கை ஐக்கிய செய்திப் பத்திரிகை கம்பனி,

மற்றும் வரையறுக்கப்பட்ட லங்கா பத்திரினை நிறுவனம்,செலசினே தொலைக்காட்சி நிறுவகம்,இலங்கை மன்றம்,தபால் திணைக்களம் ,இலங்கை அச்சகத் நிறுவனம் ஆகியவற்றின் சட்ட கட்டமைப்பிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47