வரவு–செலவுத் திட்டம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி முன்­வைத்த பெரும்­பா­லான திருத்­தங்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஏற்­றுக்­கொண்­டுள்ளார்.

இது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இணக்­கப்­பாட்டு தேசிய அர­சுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் கிடைத்த வெற்­றி­யாகும் என தெரி­வித்த ஸ்ரீ­லங்­கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான

துமிந்த

திஸா­நா­யக்க, அரச நிதியை தனியார் வங்­களில் வைப்­பி­லிடும் தீர்­மானம் விளக்­கிக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தோடு, ஊழியர் சேம­லாப நிதி நம்­பிக்கை நிதியம் ஒன்­றி­ணைக்­க­ப­டாது என்ற உறு­தி­மொ­ழி­யையும் பிர­தமர் வழங்­கி­ய­தாவும் அமைச்சர் தெரி­வித்தார்.

பார­ளு­மன்­றத்தில் பிரதி சபா­நா­யகர் அலு­வ­ல­கத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை மாலை இடம்­பெற்ற அவ­ரச ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அமைச்சர் துமிந்த திஸா­நா­யக்க இதனைத் தெரி­வித்தார்.

சுதந்­திரக் கட்­சியின் கொள்­கை­க­ளுக்கு வெற்றி கிடைத்­துள்­ளது. எனவே இரண்டாம் வாசிப்பை எதிர்த்­த­வர்கள் மூன்றாம் வாசிப்­பிற்கு ஆத­ரவு வழங்க வேண்­டு­மென நான் அழைப்­பு­வி­டுக்­கிறேன்.

ஸ்ரீ லங்கா சுத்­திரக் கட்­சியின் கொள்­கைகள் காட்டிக் கொடுக்­கப்­பட்­டு­விட்­ட­தாக கடந்த காலங்­களில் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இன்று அதற்கு முற்­றுப்­புள்ளி வைத்­துள்ளோம் என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யினை சார்ந்த அமைச்­சர்கள் நடத்­திய இந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் மேலும் கருத்­துக்கள் வெளி­யிடும் போது,

வரவு செலவுத் திட்­டத்தின் சில பாத­க­மான மற்றும் பாதிப்­பான விட­யங்கள் தொடர்­பாக ஜனா­தி­ப­தி­யிடம் நாம் பேச்­சுக்­களை நடத்­தி­ய­தோடு, பின்னர் ஜனா­தி­பதி இது தொடர்பில் பிர­தமர், நிதி­ய­மைச்­ச­ருடன் பேச்­சுக்­களை நடாத்தி ஆலோ­சனை வழங்­கினார்.

இதற்­க­மைய நாம் பிர­த­மரை சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி பெரும்­பா­லான திருத்­தங்­களை மேற்­கொண்டோம்.

நெல்­லுக்கு மட்­டு­மல்­லது தேயிலை, இறப்பர், மரக்­கறி, பழ­வ­கை­க­ளுக்கும் உர மானியம் வழங்­கப்­படும். ஊழியர் சேம­லாப நிதி, ஊழியர் நம்­பிக்கை நிதியம் என்­பன ஒன்­றி­ணைக்­கப்­ப­ட­மாட்­டாது. அரச நிதி தனியார் வங்­கி­களில் வங்­கி­களில் முத­லீடு செய்யும் முடிவு கைவி­டப்­பட்­டது . எரி­பொ­ருட்­களின் விலைகள் ஒரு­போதும் உயர்த்­தப்­ப­ட­மாட்­டாது, அதற்­கான அவ­சி­யமும் ஏற்­ப­ட­வில்லை.

அரச ஊழி­யர்­க­ளுக்கு பத்து வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை வாகன அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­படும். இது ஐந்து வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை கவ­னத்திற் கொள்­ளப்­படும். வங்­கி­களில் பணத்தை மீளப்­பெறும் போது வரி அற­விடும் முறைமை நீக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு நாம் முன்­வைத்த பெரும்­பா­லான திருத்­தங்­க­ளுக்கு பிர­தமர் இணக்கம் தெரி­வித்து நடை­மு­றைப்­ப­டுத்த டைமுறைப்படுத்த முன்வந்துள்ளார். இது தேசய அரசுக்கு கிடைத்த வெற்றியாகும். எனவே அனைவரும் மூன்றாம வாசிப்பிற்கு ஆதரவு வழங்க வேண்டும்.